மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்
குட்பட்ட, 5வது வார்டு கணபதி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியானது, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் தியான மண்டபம்
செயல்பட்டு வருகிறது .
இங்குள்ள சதீஷ் வயசு 45. மதுரை டிவிஎஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர்.
இவரது வீடு சோழவந்தான் கணபதி நகர் பகுதியில் உள்ளது. இவர், மதுரையில் வேலை பார்ப்பதால் குடும்பத்துடன் மதுரையில் தங்கி இருந்து வாரம் ஒரு முறை சோழவந்தான் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில்,
இவரது வீட்டில் கடந்த மார்ச் 10ஆம் தேதி கொள்ளை முயற்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்போது ,
இது குறித்து, சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்,
கடந்த மூன்று மாதங்களாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரியாத நிலையில் நேற்று முன்தினம்
இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவு ஜன்னல் கதவுகளை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த சுமார் ரூபாய் 60 ஆயிரம் பணத்தை கொள்
ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து, இவர் மீண்டும் நேற்று காலை சோழவந்தான் காவல் நிலையத்திற்குசென்று மறுபடியும் புகார் அளித்துள்ளார் .
இது குறித்து, இங்கு குடி
யிருப்பவர்கள் கூறும் போது ,
சோழவந்தான் பேரூராட்சியின் விரிவாக்க பகுதியான இந்த கணபதி நகர் பகுதியில், சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை
யில்வேலை பார்ப்பவர்கள் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் அப்
பார்ட்மெண்டில் குடியிருப்பு நலச்சங்கம் ஆரம்பித்து அதை
முறையாக பதிவு செய்து
மாதம் ஒரு முறை கூட்டம்
நடத்தியும் வருகிறோம். இந்த நிலையில், எங்கள் பகுதியில் ,அரசு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத நிலையில், தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக, எங்கள் குடியிருப்பு பகுதியில் முறையாக தெரு விளக்கு வசதியோ, கழிவுநீர் சாக்கடை வசதியோ ,
அரசு செய்து தரவில்லை. ஆகையால், சமூக விரோதிகளும் திருட்டு வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடு
பவர்களும், சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதும் ரோட்டில் செல்பவர்களை வழிப்பறி செய்வதும் வீட்டிற்குள் புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடித்து செல்லும் நிலையும் உள்ளது. ஆகையால் , மாவட்ட
காவல் கண்
காணிப்பாளர் இது போன்ற புறநகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply