கலெக்டரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்இது விருதுநகரில்…

விருதுநகர் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் சாத்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட தற்காலிக பணி நீக்க ஆணையினை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரியும் அனைத்து தோழர்களும் 13.02.2025 முற்பகல் முதல் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு தொடர் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.

 கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சியில் முன்னேற்பாட்டு பணிகளுக்காகவும் ,மேடை அமைக்கும் பணிகளுக்காகவும் அரசியல் நெருக்கடியின் காரணமாக இ.குமாரலிங்கபுரம் கிராமத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் கண்மாயில் இருந்து மண் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அரசியல் தலையீட்டின் காரணமாகவும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவும்  மண் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிக்காக வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் இடியும் ,மழையும் பாராமல் கோடை, குளிர் பாராமல் குடும்ப உறவுகளை மறந்து ஊண் உறக்கம் இன்றி தமிழகத்திலேயே எந்த ஒரு மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு 45 ஆயிரம் பட்டாக்கள் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் அத்தகைய மொத்த உழைப்பையும் தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பழிவாங்கும் நடவடிக்கையாக ஊழியர் விரோத போக்கினை கையில் எடுத்துள்ளார்.

அது மட்டுமல்ல வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத கரிசல் இலக்கிய திருவிழா புத்தக கண்காட்சி, திருக்குறள் மாநாடு, உணவுத் திருவிழா போன்ற எண்ணற்ற பணிகளை கொடுத்து பணி நெருக்கடியும் மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கிய மாவட்ட ஆட்சியர் அவர்களின்  முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளினால் எத்தனை அலுவலர்கள் இவரது பணி நெருக்கடியால் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார் . அதனால் அவர் குடும்பம் படும் பாட்டை அறிவாரா?

சிறிதும் மனிதநேயமற்ற இந்த மாவட்ட ஆட்சியரை கண்டிக்கும் பொருட்டும், மாவட்ட ஆட்சியரின் எதேச் அதிகாரப் போக்கினை கண்டிக்கும் விதமாகவும்

மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கினை கண்டித்து, அநீதியை எதிர்த்து அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள்  அனைவரும் திட்டமிட்டபடி நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.