நெட்டப்பாக்கம் தவளக்குப்பம் பிரதான சாலையில் கடந்த சில வாரங்களாக நெட்டப்பாக்கம் மற்றும் கரிய மாணிக்கத்தில் இருந்து வரும் கழிவுநீர் பண்டசோழநல்லூர் ஏரிக்கரையை சென்றடையும். தற்பொழுது கழிவு நீர் செல்லும் ஊரல் வாய்க்காலில் மாதக்கணக்காக அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை சுத்தம் செய்யக்கோரி பலமுறை அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வலியுறுத்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்பொழுது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்த நிலையில் இது சம்பந்தமாக பொதுமக்களிடம் நெட்டப்பாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் நெட்டப்பாக்கம் தவளக்குப்பம் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ரா. ஆனந்த் முருகன்