மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கேட் வைத்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் சிறை கதவுகளை திறப்பாரா இந்நாள் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 29 வருடங்கள் நிறைவு பெற்றது இந்நிலையில் 24 மாவட்ட ஆட்சியர்களில் வினோத சாதனையை முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தை ஆங்காங்கே இரும்பு கதவுகளை அமைத்து அலுவலகங்களை பிரித்து சிறை கூடங்களாக மாற்றியதால் அப்பாவி பொதுமக்களும் அரசு அலுவலர்களும் அனைத்து தரப்பினருமே பல்வேறு இன்னல்களுக்கு நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர் இவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டத்தையே பரபரப்பு ஆக்குகின்ற வகையில் வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் விவசாயிகள் பத்திரிகையாளர்கள் அரசு ஊழியர்கள் அனைத்து தரப்பினரிடமே அப்பாவி பொதுமக்களை விட்டு வைக்காமல் நாள்தோறும் மோதல் ஏற்படுத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும் நிலைமைக்கு கொண்டு சென்றார் இதுவரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்கள் யாரும் செய்யாத அனைத்து வினோதங்களையும் சாதனைகளையும் துக்ளக் தர்பாரையும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரங்கேற்றம் செய்தார் ஆட்சியர் பிரபு சங்கர் மோதல் ஏற்படுத்திய அனைவரிடமே சரண்டர் ஆனது தான் இவர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் செய்த வினோத சாதனை
இவர் ஆட்சியராக பொறுப்பேற்ற போது மாவட்ட முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருமே மரியாதை நிமித்தமாக சந்திப்பதை மறுத்த இவர் தனக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனக்காக அரசு ஊழியர்கள் தனக்காக நிர்வாகம் என்ற அடிப்படையில் சர்வதிகாரி போக்காக மாவட்ட நிர்வாகத்தை நடத்தினார் மாவட்ட வருவாய் அலுவலர் நிறைவேற்ற வேண்டிய பணிகள் உத்தரவுகள் ஆணைகள் அனைத்துமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மாவட்ட வருவாய் அலுவலராகவும் கூடுதல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட்டார் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் வாயிலாகவும் சமூக பங்களிப்பு நிதியைப் பெற்று தனது வீட்டை புதுப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை புதுப்பித்தல் காகவும் நூலக கட்டிடம் வெளிப்புற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் வேண்டிய நிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செலவிட்டார் மாவட்ட முதியமாகி நூற்றுக்கணக்கான அரசு அலுவலகங்கள் இன்றும் தனியார் வாடகை கட்டிடங்களில் ஏங்குகின்றது மாதந்தோறும் கோடிக்கணக்கில் வாடகை இன்றும் மாவட்ட நிர்வாகம் செலுத்தி வருகின்றது இதற்காக எவ்வித முயற்சி எடுக்கப்படவில்லை பொதுப்பணித்துறை அலுவலகமே மாவட்ட ஆட்சியருக்காக செயல்பட்டது இதற்காக ஒரு செயற்பொறியாளர் மேற்பார்வையாளர் உதவி பொறியாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் இதற்காக உழைத்தனர் பொதுப்பணி துறையோ மாவட்ட திட்டங்களுக்காக கட்டிடங்களுக்காக எவ்வித முயற்சி எடுக்காமல் ஒப்பந்தக்காரர்கள் பயன் பெறுகின்ற வகையிலும் மாவட்ட நிர்வாகம் பயன் பெறுகின்ற வகையிலும் கட்டிட பொதுப்பணித்துறை செயல்பட்டது இதே நிலையில் மாவட்டத்தில் தமிழகத்திலேயே எங்கும் கொள்ளை போகாத வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் நவீன முறையில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன அதேபோன்று 200க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக விலை நிலங்களாக மாற்றிய பிரபு சங்கர் தனது ஆதாயத்திற்காக மாவட்ட வருவாயை தனது வருவாயாக மாற்றிக் கொண்டார் இதற்கு புரோக்கர்களாக ஆண்டவன் பெயர் கொண்ட முருகன் முக்கிய காரண கர்த்தாவாக செயல்பட்டார் புரோக்கர்களுக்கு தற்போதைய மாவட்ட ஆட்சியர் முற்றுப்புள்ளி வைப்பாரா? காலம் தான் தீர்மானிக்கும்
ஊரக வளர்ச்சித் துறையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இணைந்து செயல்பட வேண்டிய அலுவலகங்களை தனித்தனியாக பாதை அமைத்து தொடர்பு இல்லாத அலுவலகமாக மாற்றிய அவலம் முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கு சாரும் அலுவலமாக மாற்றி அவலம் முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சியருக்கு சாரும் ஆட்சியருக்கு சார்பாக ஆட்சியரே சாரும் கடந்த 29 வருடமாக பொதுமக்களும் அரசு ஊழியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று விட்டு உள்ள ஊரக வளர்ச்சித் துறைக்கு ஏதுவாக செல்லுகின்ற வகையில் பாதை அமைக்கப்பட்டிருந்தது தற்போது இந்த பாதையை மூடியதால் இரண்டு அலுவலகங்களுக்கும் தொடர்பு இல்லாதவாறு பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று சாலையை கடந்து தான் மாவட்ட கண்காணிப்பாளர் வீடு வழியாக தான் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு அறிவிப்பு பலகையும் ஏதுமில்லை 25 ஆட்சியர் செய்யாத துக்ளக் தர்பார் திட்டங்களை சென்ற மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சர்வதிகார போக்கில் செயல்பட்டார் தற்போது மாவட்ட ஆட்சியர் இதற்கு தீர்வு காண்பாரா அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவாரா மக்களின் மாவட்ட ஆட்சியராக செயல்படுவாரா என்பதை ஒரு காலத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஏற்கனவே எம்எல்ஏக்கள் முந்தைய மாவட்ட ஆட்சியரிடம் மோதல் போக்கு ஏற்பட்டு சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகை வாயிலாகவும் வெளிப்பட்டது அனைத்து தரப்பு மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி விட்டு தனது ராஜ்யத்தை வருவாய் ராஜ்யமாக மாற்றிக்கொண்ட பிரபு சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் மாறுதலுக்கு தயாராகிவிட்டார் இதற்காக அனைத்து தரப்பு மக்களிடையே நல்லுறவு ஏற்படுத்துகின்ற வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு மக்களையே ஏமாற்றுகின்ற வகையில் செயல்பட்ட பிரபு சங்கர் பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர் வாக்குறுதிகளையும் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு தனது திறமையும் சாதுரித்தையும் வெளிப்படுத்தினார் இவர் மாறுதலில் முக்கிய இலக்காக எதிர்பார்த்தவர் ஆட்சியாளர்கள் கொடுத்ததோ ஷக்கு இன்றும் மாவட்டத்தை விட்டு வெளியேறாமல் இங்கேயே தங்கி உள்ளார் முன்னாலும் இந்நாளும் மாவட்ட ஆட்சியர் இல்லங்களில் தான் உள்ளனர் புதிதாக மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு விடியல் தருவாரா அனைத்து தரப்பு மக்களும் கடந்த ஒரு வருடங்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த மாவட்ட மக்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகன் விடியல் தருவாரா மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர்
-ரவிச்சந்திரன்