ஐந்து முறை பேரூராட்சி தலைவர், ஒன்பது வருடங்கள் மாவட்ட செயலாளர், இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினர் அதில் மூன்றரை வருடங்கள் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அளவுகடந்த வாய்ப்புகள் அளவுகடந்த அதிகாரங்கள் விளைவு தமிழ்நாட்டை கடந்து பக்கத்து மாநிலங்களில் பதுங்கி நிற்கும் பொருளாதாரம் என்று சொந்த கட்சியினரே பொறாமைப்படும் அளவுக்கு எல்லா வகையிலும் வளர்ந்து நிற்கும் செஞ்சி மஸ்தான், சமீபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை இழந்தார் அதை தன்னுடைய விசுவாச அடிமை திண்டிவனம் டாக்டர் சேகருக்கு கைகாட்டிவிட்டார். அதன்பிறகு இரண்டு மாத இடைவெளியில் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
ஒவ்வொரு பதவியாய் இழந்து தனிமரமானபோதுதான் தெரிந்தது அதிகாரத்தில் இருந்தபோ£து ஆடிய ஆட்டங்களின் விளைவுகள்… கட்சிப் பதவிகளையும், உள்ளாட்சி தேர்தலின்போது வேட்பாளர் வாய்ப்பு ஜெயித்த பிறகு பேரூராட்சி தலைவர், யூனியன் சேர்மன், நகரமன்ற தலைவர் பதவிகளுக்கு கைநீட்டிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட திமுகவினர் ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலைய டீ கடைகளில் வெளிப்படையாக பேசி கழுவி கழுவி ஊற்றினர் அவ்வப்போது வீடியோ ஆடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணாங்க வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவி பக்கத்து மாவட்டத்துக்காரர் அமைச்சர் எ.வ.வேலு இருக்கும் தைரியத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக செஞ்சி மஸ்தான் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் தரமற்றவை. பொன்முடி செய்வதறியாது மனதிற்குள் புழுங்கி தவித்தார். பெரிய பெரிய காண்ட்ராக்டர்களோடு கை குலுக்கியது. சாராய வியாபாரி அரூர் ராஜாவுக்கு கேக் ஊட்டுவது குடும்பத்தினர் உறவுகளை எல்லாம் அரசியலில் இறக்கி அதிகார பகிர்வு உண்டாக்கிய மஸ்தான், வடக்கு மாவட்டத்தில் தன்னோடு ஒத்து போகாத சீனியர்களை ஒதுக்கி வைத்தார்.
அமைச்சராக இருந்தபோது வருமானத்தை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வளர்த்தார் என்பதை திமுகவினரே தங்களுக்குள் அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டனர். மரக்காணம் சாராய சாவுகள் நடந்தபோது பதவிகளை மொத்தமாய் இழந்திருக்க வேண்டியவர், காலம் கடந்து தவணை முறையில் இழந்திருக்கிறார் வன்னியர் சமுதாயத்தினர் மெஜாரிட்டியாக இருக்கும் இடத்தில் செஞ்சி மஸ்தான் ஏகப்பட்ட தப்பாட்டங்களை ஆடி தீர்த்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சமயத்தில், பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அறிக்கை அக்கப்போருக்கு பயந்துகிட்டு டாக்டர் சேகரை மாவட்ட செயலாளர் ஆக்கிட்டாங்க, லாரி லாரியாய் குவிந்த புகார்களுக்கு அமைச்சர் பதவியை புடுங்கிட்டாங்க. சரி இப்ப என்ன நிலவரம்..? வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடிகிட்ட போயிட்டாங்க, உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்களில் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் மூன்று யூனியனை தவிர மற்றவங்க அமைச்சர் பொன்முடியிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டாங்க, சிரிக்க முடியாமல் சோகமாக இருக்கும் செஞ்சி மஸ்தான், மாப்பிள்ளை சபரீசனை பார்த்திட்டேன், துணை முதல்வர் உதயநிதியை பார்த்திட்டேன், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பார்த்திட்«ன் கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி வரும் என்று தன்னை பார்க்க வருகிறவர்களிடம் உருட்டிக்கொண்டிருக்கிறார். ஆமாம் எதுக்கு இந்த உருட்டு? காரியம் முடிச்சி தர்றேனு கைநீட்டி வாங்கியதை திரும்ப கேட்கறாங்க…, அவங்களை சமாளிக்கத்தான்! நான் மறுபடியும் மாவட்ட செயலாளர் ஆகனும் நீங்கள் எல்லாம் கடிதம் கொடுங்கள் என்று நிர்வாகிகளிடம் தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். எப்பவும் வீட்ல அடைஞ்சி கிடக்க முடியாது இல்லையா? அதனால இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ கோவில்களுக்கு ஆன்மீக பயணம் போய்க்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்தார். திமுகவினர் மட்டுமல்ல அதிகாரிகள்கூட செஞ்சி மஸ்தானை கண்டுகொள்ளவில்லை. மாஜி மஸ்தான் மன உளைச்சலில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
– ஆலவாயர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply