கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலந்தவிளை கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் மகன் எஸ். பி. விஜய் ஆனந்த் மீது விபச்சார வழக்குகள் உட்பட 24 குற்ற வழக்குகள் இருந்தன. இந்நிலையில் விபச்சார வழக்கில் இவரை கன்னியாகுமரி காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் கைது செய்ய செல்லும்போது காம்பவுண்டு சுவர் தாண்டி குதித்து ஓடியதில் கை உடைந்தது. இதில் ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி காவல்துறையினர் மேற்படி விஜய் ஆனந்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
– மணிகண்டன்
Leave a Reply