Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை -பிரதமர் மோடி – அண்ணாமலை…தவறான வீடியோ வெளியிட்ட,பசும்பொன் பாண்டியனை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தவறாக பேசி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியையும் பாஜக தலைவர் அண்ணாமலையும் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை.

அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பசும்பொன் பாண்டியனை உடனடியாக கைது செய்ய வேண்டும், தவறினால் பாஜக தொண்டர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசினால் உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபடும் தமிழக காவல்துறை, பாரதப் பிரதமரையும் பாஜக தலைவரையும் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டது தொடர்பாக காலையிலேயே புகார் அளித்தும், இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, பிரதமர் குறித்து தவறாக வீடியோ வெளியிட்ட அந்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, திமுகவினரும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் அனைத்து மொழிகளையும் கற்பிக்கிறார்கள், ஆனால் மற்ற யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக திமுகவினர் எதிர்க்கிறார்கள் என தெரிவித்தார்.

– நா.ரவிச்சந்திரன்