சீமானிடம் கூட்டணி கேட்ட விஜய்…!?
யார் செலவழிப்பது தொடரும் சிக்கல்…
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தற்போது முதல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி கணக்குகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தற்போது ஆளுங்கட்ச்சியாக இருக்கக்கூடிய திமுக இந்தியா கூட்டணியை வைத்து தேர்தலில் சந்திக்கும் என்கின்றனர் திமுக வட்டாரத்தில் உள்ளவர்கள் மேலும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுகவும் திமுகவுடன் தேர்தலை சந்திப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும் அவர்களுக்கான தொகுதிகளை இறுதி செய்வதை இன்னும் சில நாட்களிலே அவர்கள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன உள்ளத. திமுக ஏற்கனவே 2019,2021 மற்றும் 2024 தேர்தலில் தொடர் வெற்றியை பெற்றிருப்பதால் இந்த கூட்டணியை தொடர்வதே என்று அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. வேல்முருகன் மட்டும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று தகவல்கள் வருகின்றனர். மேலும் புதியதாக தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி வரும்போது பிரபலதா விஜயகாந்த் எதிர்பார்க்கக் கூடிய மாநிலங்களவை உறுப்பினரும் பத்து சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கொடுக்க முன் வரும் என்கின்றனர் திமுக தரப்பினரும் தேமுதிக தரப்பினரும். அதிமுக அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கொடுத்து தங்கள் பக்கம் பாமகவை இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக தனித்து களம் கண்ட தேர்தலில் இரண்டு கட்சிகளுமே மோசமான தோல்வியை கண்டுள்ளது இதனால் பாஜகவின் மூத்த தலைவர்களும் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர் குறிப்பாக எடப்பாடி மீது செங்கோட்டையன் வேலுமணி தங்கமணி தளவாய் சுந்தரம் என்று அதிமுகவினுடைய முக்கிய முன்னாள் அமைச்சர்கள் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 10- 15 தொகுதிகளை வெற்றி பெற்றிருக்கலாமே இப்படி தனித்து களம் கண்டு நாம் தோற்றுவிட்டோமே என்று வருத்தப்பட்டு உள்ளனர் அதற்காக எடப்பாடிக்கு எதிராகவும் அவர்கள் செயல்படத் தொடங்கினர். அண்ணாமலைக்கு எதிராக பாஜகவில் வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன் பொன் ராதாகிருஷ்ணன் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட மூத்த தலைவர்களும் டெல்லிக்கு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நாம் நாடாளுமன்றத்தில் 10- 15 எம்பிக்களை பெற்றிருக்கலாம். அது இன்னும் கூடுதல் பலமாக அமைந்திருக்கும் இதன் மூலம் டெல்லி அரசியலில் மோடிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அதிமுக விஜய் கூட்டணி என்றும் அப்படி கூட்டணி அமைந்தால் விஜய்க்கு 40 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று பலரும் கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளும் பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் தெரிவித்து வந்திருந்தனர் விஜய்க்கு 40 தொகுதிகள் கொடுப்பதில் அதிமுகவிற்கு
விருப்பம் இல்லை. காரணம் உலக வெற்றி கழகத்தில் பொருளாளர் வெங்கட்ராமன் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தூத்துக்குடி அஜித்தா ஆகினால் சேலம் பார்த்திபன் போன்றோர் மட்டுமே வேட்பாளராக வர தகுதி உள்ளவர்களாக இருப்பதாகவும் 40 தொகுதிகளுக்கு விஜய் கட்சியில் போதுமான வேட்பாளர்கள் இல்லை என்ற தகவல் அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் மிகவும் தொய்வில் இருப்பதால் அவர்களுக்கு 40 தொகுதிகள் கொடுப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவிற்கும் உடன்பாடு இல்லை என்பதால் தமிழக வெற்றி கழகமும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் நீட்டிக்கிறது. இதனால் தனித்து தமிழக வெற்றி கழகம் போட்டியிட 234 வேட்பாளர்கள் கிடைப்பதிலும் மிகவும் சிக்கலான சூழல் உள்ளது. காரணம் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் கோடிகள் வரை செலவாகும் என்பதால் விஜய் கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்களோ பொறுப்பாளர்களோ அதற்கு தகுதியானவர்களா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்கின்றனர். மேலும் 234 தொகுதியில் போட்டியிட வேட்பாளர் கிடைக்காத பட்சத்தில் நாம் என்ன செய்வது என்று மாற்றுப்பாதையை தற்போது விஜய் தரப்பு எடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றனர. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு மே மாதம் விஜய் சீமான் சந்திப்பு நடந்தது சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசப்பட்டது ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் அப்போது வந்துள்ளது. தற்போது மீண்டும் அதே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்கள் என்கின்றனர் விஜய் கட்சியினர். மிகவும் சோகத்துடன் நம்மிடம் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை அதிமுகவுடன் கூட்டணி என்கின்ற நிலையில்தான் நாங்கள் சில காலம் பயணித்தோம். ஆனால் அதிமுக தற்போது பாஜக கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது இதனால் நாங்கள் திமுக கூட்டணிக்கு செல்ல முடியாது. தனித்தும் களம் காண முடியாது. தனித்து ஒரு கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் நீட்டிக்கிறது காரணம் கட்சி வலுவான கட்டமைப்பில் இல்லை என்கிறார். அந்த தலைமை நிர்வாகி மேலும் பேசுகின்ற பொழுது விஜய் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கினோம். ஆனால் தவறான ஆலோசனையை வழங்கி விட்டார் ஜான் ஆரோக்கியசாமி. கட்சி தொடங்கி கட்சியின் வளர்ச்சி வேகப்படுத்தாமல் கிடப்பில் போட்டதே கட்சிக்கு பலரும் வரவிடாமல் தடுத்ததே இதற்கு காரணம் என்கின்றனர் பொருளாதார ரீதியாக தொண்டர்கள் தற்போது சிரமப்படுவதால் தனித்து களம் காண வாய்ப்பு இல்லை இதனால் சீமானுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறார் ஜான் ஆரோக்கிய சாமியும் ஆதவ் அர்ஜுனாவும் ஆனால் இந்த கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஆதவ் அர்ஜுனா விருப்பப்படவில்லை என்றும் ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே இந்த கூட்டணிக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது மேலும் சீமான் விஜய் கூட்டணி அமைவது தவறானது என்று விஜய் கட்சியினர் தெரிவிக்கின்றனர். காரணம் விஜய் கொள்கை தலைவராக பெரியாரை வைத்துள்ளார் பெரியாருக்கு எதிராக சீமான் பேசினார் ஆனால் விஜய் சீமானுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்ததற்கு காரணம் ஜான் ஆரோக்கியசாமி தான் என்கின்றனர் மேலும் கொள்கை தலைவராக இருக்கக்கூடிய பெரியாரை விட்டுவிட்டு நாம் கூட்டணிக்கு போக முடியுமா நம் தலைவரை ரோட்டில் அடிபட்டு சாவாய் என்று சொன்னவுடன் நம் கூட்டணிக்கு செல்லலாமா என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். சீமான் கூட்டணிக்கு வருவதாக இருந்தால் செலவுக்கு பணம் குறித்து கேட்பதாகவும் அதற்கு ஜான் தரப்பு எங்கள் வேட்பாளருக்கு தாங்கள் செலவழித்துக் கொள்வதாகவும் உங்கள் வேட்பாளருக்கு நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவும் அதற்கு சீமான் கூட்டணிக்கு வருவதாக இருந்தால் நீங்களும் பணம் செலவு செய்ய வேண்டும். எந்த பண பொருளாதாரத்தை எதிர்பார்க்கக் கூடாது என்று கூறியிருப்பதால் முதல்வராக சீமானை முன்னிறுத்தி விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வார் என்றும் சீமான் இந்த கூட்டணியில் விஜய்க்கு முப்பது தொகுதிகள் தான் தருவேன் என்று தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றனர். இந்த செய்தியை கேட்ட விஜய் கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களிலும் ஆதங்கத்தை கொட்டி இருக்கின்றனர். சீமானுடன் கூட்டணிக்கு நாம் செல்வது தற்கொலைக்கு சமம் என்கின்றனர் எது என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்ப்போம் இறுதியில் ஜான் ஆரோக்கியசாமி விஜயை நடுத்தெருவில் நிறுத்தி விடுவாரா என்று அச்சம் கொள்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
-திலீபன்அய்யனார்