நாமக்கல் மாவட்டத்தில் ஆப்புகளை முற்றிலும் புறக்கணித்தது… புதிய ஆப்பை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள்..
கடந்த 1 ஆம் தேதி முதல் நாமக்கல் நகரில் சோமாட்டா ஆப்கள் உணவு டெலிவரி செய்யும் செயலை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமிஷன் தொகை 35 சதவீதத்திலிருந்து 15 முதல் 18 சதவீதமாக குறைக்க வேண்டும் மறைமுக கட்டணம் விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில் அது தோல்வியில் முடிவடைந்தது..,
மேலும் வரும் 7 ஆம் தேதி திங்கள் முதல் சரோஸ் என்ற புதிய ஆப் மூலம் நாமக்கல் நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பாக ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பின்னர் அந்த ஆப்பை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளனர்..
இந்த ஆப் ஆனது,கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த சாரோஸ் என்ற ஆன்லைன் செயலியை ராம் பிரசாத் மற்றும் ஜெயசிம்ஹன் என்ற இரண்டு நண்பர்கள் வடிவமைத்ததாக கூறப்படுகிறது..
சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்து இந்தியாவுக்குத் திரும்பியதாகவும்..
தங்களது சொந்த ஊரான சிதம்பரத்தில் ஆன்லைன் செயலி மூலம் உணவு வழங்கலாம் என்று இதனை முதலில் வடிவமைத்துச் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, காய்கறிகள் பழங்கள் மருத்துவ பொருட்கள் தொடங்கி வீட்டுக்கு தேவையான அனைத்து உபயோக பொருட்களும் இந்த செயலி மூலமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
பெருநகரங்களில் உணவு சேவை உள்ளிட்டவை வழங்க பல்வேறு செயலிகள் இருந்த போதிலும், சிறிய நகரங்களிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பதிவு செய்துள்ளது. இந்த செயலி ஆனது சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சின்ன சேலம், திட்டக்குடி, சீர்காழி போன்ற 30 மேற்பட்ட சிறிய நகரங்களில் தற்போது இந்த பணியைச் செய்து வருகின்றனர்..
தொடர்ந்து தற்போது இந்த ஆப்பை நாமக்கல் நகரில் அறிமுகம் படுத்தப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் இனி வருங்காலங்களில் இந்த செயலியை உபயோகப்படுத்தப்படும் என பேசப்பட்டு வருகிறது…
குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை நாளடைவில் அதிக மாவட்டங்கள் விரிவாகும் என நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தனர்..
நாமக்கல் நகரில் உள்ள ஹோட்டலில் என்ன விலையோ அதே விலைக்கு உணவு டெலிவரி செய்து தரப்படும் என விளம்பர நோட்டீஸ்கலை அச்சிட்டு விளம்பரப்படுத்து உள்ளனர்… நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் பேக்கரி டீ காபி ஸ்டால் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தன
- கௌரிசங்கர்