திண்டிவனம்… கூட்டத்திற்கு அழைத்துச்சென்று பணம் தருவதாக கூறி ஏமாற்றினர்… பெண்கள் புகார்…

மரக்காணம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பணம் தருவதாக கூறி அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தறாததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மரக்காணம் நகர திமுகவினர்  பஸ்நிலையம் எதிரில் ஓரணியில் தமிழ்நாடு  பொதுக்கூட்டம் நடந்தது.
 கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

மரக்காணம் ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் பெண்களுக்கு தலா ரூபாய் 500 தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்தனர்.

கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது மழை குறுக்கிட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் கலைந்து சென்றனர். அப்பொழுது அங்கிருந்த பெண்கள் நிர்வாகிகளின் கவனிப்பை பெருவதற்காக கடைகளின் கூறைகளில் ஒதுங்கி நின்றனர். இதை கவனித்த நிர்வாகிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். இதனால் கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் கிடைக்காமல் பரிதவித்தனர். மேலும் அவர்களை அழைத்துவந்த ஆட்டோக்களும் அங்கு இல்லாததால் பஸ்ஸில் செல்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதவித்தனர் எதனால் அங்கு  சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேசி அனுப்பிவைத்தனர்.

  • சந்திரன்