திருவள்ளூர்-
மாவட்ட மக்களை வஞ்சிக்கும் வருவாய் அலுவலகம்?
ஆயிரம் கணக்கான கோப்புகள் தேக்கம்…
திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த ஒரு வருடங்களாக ராஜ்குமார் இருந்து வருகிறார் அவர் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வமதி செயல்பட்டு வருகின்றார் இவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில் நிலப் பிரிவுகள் சம்பந்தமாக என் பிரிவு பி பிரிவு எப் பிரிவு மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன இந்த மூன்று பிரிவுகளில் நிலம் தொடர்பான ஆயிரக்கணக்கான கோப்புகள் வருட கணக்கில் தேங்கி கிடக்கின்றது கடந்த 25 வருடங்களாக எந்த ஆட்சியர் காலத்திலும் இதுபோன்று மாவட்ட வருவாய் அலுவலகம் செயல்பட்டது கிடையாது மாவட்டத்தில் உள்ள (ஹிஞிஸி) திருத்தம் பட்டா மாறுதல்கள் திருத்தங்கள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்குதல் அனைத்து நிலம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து உண்மையானவர்களை கண்டறிந்து ஆவணங்களை திருத்தி ஒப்படைக்க வேண்டிய பணிகளை செய்து வருவது இந்த மூன்று பிரிவுகளிலும் நடைபெற்று வருவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது கடந்த ஒன்றை வருடங்களாக நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வமதி தனக்கு கீழ் பணி புரியும் வருவாய் அலுவலர்கள் கொண்டு கூட்டம் நடத்துவது என்ற பெயரில் அடிக்கடி நடத்தி அலுவலர்களை நிர்பந்தப்படுத்தி அவர்களை பணி செய்ய விடாமலேயே பல்வேறு உத்தரவுகளை மாறி மாறி பிறப்பித்து எவ்வித பணியும் முடிவெடுக்க முடியாமல் காலம் கடத்தி வந்தது தான் கடந்த ஒன்றை வருட காலமாக இவர் செய்த சாதனை இவர் மிஞ்சும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலரோ ராஜ்குமார் நிலம் தொடர்பான பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை அழைப்புகளை அனுப்பி வைத்து முறையாக விசாரணை நடத்தாமல் வாய்தாக்களை போட்டுவிட்டு காலம் கடத்தி பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பதை கடந்த ஒன்றை வருடங்களாக செயல்பட்டு வருகின்றார் ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கி கிடப்பது பற்றியும் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிப்பது பற்றியும் எவ்வித கவலைப்படாமல் தன்னலமே மாவட்ட நலம் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கடந்த ஒன்றை வருடமாக செயல்பட்டு வருகின்றார் .
தனக்கு வேண்டிய வருவாய் அலுவலர்களுக்கு வேண்டிய இடத்தில் பணி மாறுதல் வழங்குவதும் வேண்டப்படாதவர்களை முறையான பணி மாறுதல்கள் வழங்காமல் காலம் கடத்துவதும் தொடர் நடவடிக்கையாக மாவட்ட வருவாய் அலுவலர் செயல்பட்டு வருகின்றார் வருவாய் சங்கத்தை பாரபட்சமாக நடத்துவதும் ஏதேச்ச அதிகாரம் கொண்டு மாறுதல்கள் வழங்கி வருகின்றார் இதற்கு முந்திய மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் கண்டுகொள்ளாமல் மாவட்ட வருவாய் அலுவலர் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகமாக செயல்பட்டதால் வருவாய் அலுவலர்கள் இடத்தில் பிரிவுகளும் பாரபட்சமும் இன்று வரை நீடித்து வருகின்றது மூன்று நிலவப்பிரிவுகளுமே ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கி கிடப்பதை பற்றி கவலைப்படாமலும் பொதுமக்கள் நாள்தோறும் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதும் தொடர் சம்பவமாக கடந்த ஒரு வருடமாக மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாநில உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்து விசாரணையில் நடைபெற்று வருகின்றது எண்ணற்ற நீதிமன்ற வழக்குகளும் அவமதிப்புகளும் இவர் காலத்தில் தான் நடைபெற்றது எதைப் பற்றியும் கவலைப்படாமல்
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் நேர்முக உதவியாளர் செல்வமதி இருவரும் ஒன்றை வருடங்களாக நிலம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித தீர்வு காணாமல் அலைகழித்து வந்தது தான் இவர்கள் செய்த சாதனை இவர் இருவர்கள் மீது வருவாய் துறை செயலாளரிடம் எண்ணற்ற புகார்கள் விசாரணையில் இருந்து வருகின்றது இவர்கள் மாறுதல்கள் தான் மாவட்ட மக்களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் மாறுதல் மாவட்ட மக்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போன்று இவர்கள் மாறுதல்கள் தான் மக்களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் தற்போது புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட மக்களுக்கு அனைத்து வகையிலும் தீர்வு காணப்படும் என்ற வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பாடு இருந்து வருகிறது மாவட்ட வருவாய் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தேங்கி கிடக்கின்ற நில சம்பந்தப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காண வேண்டும் வருவாய் அலுவலர்கள் பணி மாறுதல்கள் பாரபட்சமின்றி தகுதியானவர்களுக்கு தகுதியான இடத்தில் பணி மாறுதல்கள் வழங்க வேண்டும் ஊழல் புகாரில் சிக்கிய வருவாய் அலுவலர்கள் மீது தேங்கி கிடக்கின்ற கோப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை வேண்டும் வருவாய் அலுவலர்கள் எதிர்நோக்குகின்றனர் புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் நடவடிக்கை எடுப்பாரா…
-கே.ரவிச்சந்திரன்