வடிவேலு – சுந்தர். சி ரீயூனியன் கல்லா கட்டுமா..?
சினிமாவில் திரையில் தோன்றும் சில ஜோடிகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படங்களில் வடிவேலுவின் காமெடி கலக்கலாகவும், தூக்கலாகவும் இருக்கும். ‘வின்னர்’, ‘கிரி’, ‘ லண்டன்’, ‘ரெண்டு’, ‘நகரம் மறுபக்கம்’ என சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படங்களில் வடிவேலுவின் காமெடி அதகளமாகி, படங்களின் வெற்றிக்கு உதவியது.
அதன் பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக உயர்ந்து தனியாவர்த்தனத்தை தொடங்கினார். அந்தக் கச்சேரிக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு இல்லாததால் மீண்டும் சுந்தர்சியிடம் சரணடைந்திருக்கிறார். இந்த இருவரும் இணைந்த ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றிக் கூட்டணி என்பதனை நிரூபிக்கும் வகையில் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் வடிவேலு சிங்காரம் எனும் வேடத்தில் பி டி மாஸ்டர் ஆக நடித்திருக்கிறார் அத்துடன் பணத்தை கொள்ளையடிப்பதற்காக வித்தியாசமான கெட்டப்புகளுடன் தோன்றி ரசிகர்களுக்கு சிரிப்பிற்கான உத்தரவாதத்தை தருகிறார். இதனால் ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த திரைப்படம் இம்மாதம் 24-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த கூட்டணி கல்லா கட்டுமா? என்பதை விட… ஓப்பனிங் சுமாராக இருந்தாலும்.. போட்ட முதலுக்கு மோசம் இல்லாம.. எல்லாருக்கும் லாபம் கிடைக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.
– கே.வி.ஆர்.கோபி
