Save 20% off! Join our newsletter and get 20% off right away!

லக்கி பாஸ்கர்-Netflix OTT யில் வெளியான பிறகு,theatreக்கு வரும் கூட்டம்!

1990களில்  நடந்த ஹர்ஷத் மேத்தா தொடர்பான பாங்க் ஊழலைக் கதையாக்கி எடுக்கப்பட்ட படம். 

ஆனால் இது ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கைக் கதையல்ல.  அந்த 90ஸ் காலகட்டத்தில், பம்பாயில்,  பாங்க்கில் வேலை செய்யும் ஒரு புத்திசாலி இளைஞன்  தவறுகள் (financial frauds)  செய்தும்,  லக்கியாய், சரியான நேரத்தில்   தவறை நிறுத்தி, எழக்கூடிய ஆபத்திலிருந்து தப்பிக்கிறான் எனும்  கதை..!

அதிர்ஷ்டத்தை நம்பி நாம் ஈடுபடும் பண  விஷயங்களில் (உதாரணம்: ஸ்டாக் மார்க்கெட், financial frauds) அதில் அடிக்ட் ஆகி விடாமல்,  சரியான நேரத்தில் அதிலிருந்து வெளியேறி விடுவது முக்கியம் என்பது கதையின் கரு..! 

ஷர்ஷத் மேத்தா  மற்றும் பல Banks  சம்பந்தப்பட்ட Bank Receipt Notes Scam, அது என்ன என்பது  ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்த சில  நபர்களுக்கு  அப்போது சரியாக விளங்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஓரளவு புரிந்தது..!

இதிலும்,   Banking, Stock market பற்றி  அதிகம்   தெரியாதவர்கள்,  புரியாமல்  குழம்பலாம். ஆனால், அது தவிர, கதை, சீன்ஸ்  குழப்பமில்லாமல் நன்றாகவே இருக்கிறது..!

உண்மைத்தன்மையோடு நல்ல ஸ்கிரீன்ப்ளே செய்திருப்பதால், படம் சுவாரசியமாக  நகர்கிறது..! துல்கர் சல்மான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியான சாய்ஸ்..! 

இது போன்ற ஆங்கிலப் படங்கள் பல பார்க்கிறோம். என்ன வித்யாசம் என்றால்,  ஹாலிவுட் படங்களில்,  ஒவ்வொரு சீனையும்  தொடங்கும் கட்டமும் முடிக்கும் கட்டமும்தான் விறுவிறுப்பைக் கூட்டும்..! Slick narration என்பார்கள்..!  இந்திய டைரக்டர்கள் அதைக் முயற்சி செய்ய  வேண்டும்..! 

லக்கி பாஸ்கர் நரேஷன்  அவ்வளவு slickகாய் இல்லை,  சுமார் ரகம். ஆனாலும், போரடிக்காமல், சுவாரசியமாகவே இருப்பதால்,  பார்க்கலாம்..!

Climax வேற லெவல்.👍👏 ராம்கி கேரக்டர் மிகவும் அருமை அந்த மாதிரி ஒரு நம்பிக்கையான நபர் நம் வாழ்வில் கிடைத்தால் நாம் புண்ணியம் செய்தவரே…

லக்கி பாஸ்கர் டாப் கியர்…

குறிப்பு.. Netflix OTT யில் வெளியான பிறகு தான் theatre இல் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது…

சு.பகவதி முருகன்