திருவள்ளூர்-
இரண்டு முறை கட்டிய திருக்கண்டலம் அணைக்கட்டு காணவில்லை…
அதிகாரிகள் கண்டுபிடித்து தர விவசாய சங்கங்கள் போர்க்கொடி…
திருவள்ளூர் மாவட்டம் நீர்வளத் துறைக்கு சொந்தமான திருக்கண்டலம் கொசுத்தலை ஆற்றில் குறுக்கே விவசாய நிலங்களுக்காகவும் நீர் பாசனத்திற்காகவும் அணைக்கட்டு சுமார் 30 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது இந்த அணைக்கட்டு நம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் இருந்து வருகின்றது நீர்வளத் துறை மூலமாக முக்கிய பிரமுகர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக டெண்டர் கோரப்படாமல் இந்த ஒப்பந்த பணி வழங்கப்பட்டது அதிகாரிகள் சரிவர மேற்பார்வை இடாமலும் கட்டிடப் பணிகளை முறையாக கண்காணிக்காதவும் கட்டி முடிப்பதற்கு முன்பே சாதாரண மழைக் காலத்தில் இந்த தடுப்பணை அடித்துச் செல்லப்பட்டது அடித்துச் செல்லப்பட்ட அணைக்கு நீர் பாசன துறை அதிகாரிகள் மழைக்காலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் அடித்துச் செல்லப்பட்டதாக இதற்கு விளக்கம் கொடுத்தனர் சாதாரண மழைக்கே இந்த அணைக்கட்டு அடித்துச் செல்லப்பட்டதற்கு தரமற்ற முறையில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்
ஏற்கனவே இது குறித்து நீர் பாசனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட வேண்டும் இதில் தொடர்புடைய நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் ஒப்பந்தக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த அணை கட்ட வேண்டும் என்று அமைச்சர்கள் முதல் நீர்வளத்துறை அதிகாரிகள் வரை புகார் கொடுக்கப்பட்டது இதன் அடிப்படையில் அப்போது இருந்த அதிகாரிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக அரசுக்கு தவறான அறிக்கை கொடுத்து ஒப்பந்தக்காரர்களிடம் ரகசிய கூட்டு ஏற்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தினர் மீண்டும் இதை சரி கட்டுகின்ற வகையில் அதே ஒப்பந்ததாரருக்கு மீண்டும் பணி வழங்கி ஆளுங்கட்சி நிர்பந்தத்தால் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது அந்தப் பணியை மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாலும் ஒப்பந்தகாரர்களுக்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டதால் மீண்டும் மழைக்காலத்தில் அதே அணைக்கட்டு அடித்துச் செல்லப்பட்டது இது குறித்து அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டது
அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துகின்ற வகையில் செயல்பட்ட அதிகாரிகளை கண்டித்தும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றது இதன் மூலமாக நீர் பாசன துறைக்கு 50 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் அன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்றுவரை நிலுவையில் இருந்து வருகின்றது உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை சிண்டிகேட் அமைத்து கூட்டுக் கொள்ளை நடத்திய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தரமான அணைக்கட்டு கட்டி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
மேலும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் ஏரி பாசன சங்கத் தலைவரும் ஆத்தூர் தாஸ் அணைக்கட்டு தொடர்புடைய அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரமான அணைக்கட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிரந்தர பாசன வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்
இதேபோன்று சோழவரம் ஒன்றியம் ஜெகநாதபுரத்தில் ஆற்றுப்படுகையில் முழுவதுமாக சமூக விரோதிகள் வருவாய் துறையினர் பொதுப்பணித்துறையினர் மூவரும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ஆற்றுப்படுகையில் சர்வே எண் 49/1 110 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து வீட்டு மனைகளாக உருவாக்கி விற்பனை செய்துள்ளனர்
கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த சமூக விரோதிகள் மீதும் ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் வருவாய்த் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய சப் கலெக்டராக சங்கீதாவிடம் புகார் கொடுத்தார் சமூக ஆர்வலர் காந்தாராவ் ஆக்கிரமிப்பு அகற்றவும் நிலத்தை மீட்கவும் உயர்நீதிமன்றத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் மீதும் வட்டாட்சியர் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் வருவாய் துறை அதிகாரிகள் நீர் பாசன துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகாததால் அவமதிப்பு வழக்காகவும் மாறியதால் அப்போதைய சப் கலெக்டர் வட்டாட்சியர் மணிகண்டன் நேரில் ஆஜராகி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் இடத்தை ஆய்வும் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பகுதியை கனரக இயந்திரங்கள் கொண்டு அகற்ற முற்பட்டனர்
அதன் அடிப்படையில் சங்கீதா ஜெகநாதபுரத்தில் உள்ள ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டார்
அப்போது பத்து ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாகவும் கட்டிடங்கள் கட்டியும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது சப் கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு கட்டிடங்களை அப்புறப்படுத்த முயன்றபோது இப்பகுதியில் முக்கிய பிரமுகர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மேலிடத்தின் நிர்பந்தத்தின் காரணமாக சப் கலெக்டர் சங்கீதா தனது நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு காலம் கடத்தினார் சமூக ஆர்வலர் காந்தாராவ் உரிய ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றுப்படுகையை பாதுகாக்கின்ற வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது இதே பகுதியில் சோழவரம் ஒன்றிய ஆணையர் மேல் நீர் தேக்க தொட்டி கட்டியும் அதற்கு தேவையான சாலைகள் அமைத்தும் அந்த இடத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்துள்ளார் தற்போது இந்த இடம் எல்லாம் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை மீட்டு அதற்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து நீர் நிலை புறம்போக்கை பாதுகாத்து தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் தாஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார் நடவடிக்கை எடுக்கப்படுமா நிலங்கள் மீட்கப்படுமா வருவாய்த்துறை நீர் பாசன துறைக்கு வெளிச்சம்.
– கே.ரவிசந்திரன்