திருவள்ளூர் ஆவடி- ஒரே சர்வே எண்ணில், ஒரு பகுதிக்கு பட்டா… இன்னொரு பகுதிக்கு அல்வா…

திருவள்ளூர் ஆவடி-
ஒரே சர்வே எண்ணில்,
ஒரு பகுதிக்கு பட்டா… இன்னொரு பகுதிக்கு அல்வா…

திருவள்ளூர் மாவட்டம் அமைச்சர் ஆவடி நாசர் தொகுதியில் உள்ள காவேரிபட்டு கிராமத்தில் சர்வே எண் 8/2 குடியிருப்பு நிலத்தில் குடியிருப்பு வாசிகள் 40 ஆண்டு காலமாக குடியிருந்து வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் முறையாக நில உரிமையாளர்களிடம் கிரையம் பெற்று பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்து ஆவணங்கள் பெற்று முறையாக தங்கள் வசதிக்கு ஏற்ப குடியிருப்பு வீடுகளை கட்டி அனைத்து அடிப்படை வசதிகளும் ஆவடி மாநகராட்சி மூலமாக பெற்று கடந்த 40 வருடங்களாக வசித்து வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கடந்த 40 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர் இவர்கள் வீட்டு வரி மின் கட்டணம் குடியிருப்பு கட்டணம் அனைத்து வரிகளையும் ஆவடி மாநகராட்சியில் செலுத்தி வருகின்றனர்

 இவர்கள் பகுதியில் சர்வே எண் 8/1 ல் பாக பரிவர்த்தனை செய்து ஒரு பகுதிக்கு வீட்டு மனைகளாக கிரயம் பெற்று 20 வருடங்களுக்கு முன்பே முறையாக ஆவடி வட்டாட்சியர் மூலமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதை மேற்கோள் காட்டி கடந்த 20 வருடங்களாக ஒரே சர்வே எண்ணில் மற்றொரு பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று 40 வருடங்களாக வசித்து வருகின்றனர்

இதை மேற்கோள் காட்டி ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டிய 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் வசித்து வரும் நடுத்தர மக்கள் மனுக்கள் கொடுத்து வருகின்றனர் இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆவடி வட்டாட்சியர் அலுவலர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதை ஒட்டி தங்களுக்கு முதலமைச்சர் வருகையை ஒட்டி உங்களுக்கு பட்டா வழங்குகிறோம் என்று ஆவணங்களை பெற்றுச் சென்று அதிகாரிகள் தற்போது கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகின்றனர் ஒரே சர்வே எண்ணில் 20க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலகமும் வட்டாட்சியர் அலுவலகமும் அதே சர்வே நம்பரில் அடங்கியுள்ள ஐம்பதற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் நடுத்தர மக்களுக்கு பட்டா வழங்காமல் கட்டண வசூலிக்க நிர்பந்தப்படுத்துவது ஏன் ?

மாவட்ட வருவாய் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் வட்டாட்சியரின் பாராபட்சத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர் அமைச்சர் நாசர் தொகுதியில் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் 40 ஆண்டு காலம் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க எவ்வித நடவடிக்கை எடுக்காத அமைச்சர் நாசரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

– கே.ரவிசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *