மதுரை-பாரம்பரியத்தை போற்றும்…உணவுத் திருவிழா!

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமிக்கா ஹோட்டலில் மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பாண்டிய நாடு உணவு திருவிழா தொடங்கியுள்ளது.
பனங்கிழங்கு லட்டு, பருத்திப்பால், கருப்பு கவுனி அல்வா, கருப்பட்டி சீஸ் கேக், வீரன் கறி சோறு உள்ளிட்ட 65 வகை உணவுகள் உணவு திருவிழாவில் ரசிக்க மட்டுமல்ல பாண்டிய நாடு உணவு திருவிழா ருசிக்கவும் தான்.
உணவே மருந்து என்பதற்கேற்ப 65 உணவு வகைகள் ஏப்ரல் 11 முதல் 14 வரை 4 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழா,
தமிழகத்தின் கலாச்சார மாநகரான மதுரையில் பாரம்பரிய உணவு வகைகளை கொண்டாடும் வகையில் மதுரை அமிக்கா ஹோட்டலில் “பாண்டிய  நாட்டு உணவு திருவிழா  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லக்கூடிய நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள அமிக்கா நட்சத்திர விடுதியில் மதுரையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா வருவதை ஒட்டி அதனை போற்றி  கொண்டாடும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய வரவேற்பு வகையில் மாவிலை தோரணம் கட்டி, சந்தனம் குங்குமம் வழங்கி வேஷ்டி சட்டையுடன் பாண்டிய நாட்டு உணவு திருவிழா விற்கு வந்த விருந்தினர்களை வரவேற்றனர்.
உணவுத்திருவிழா நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் 
அதிசய ராஜ் செய்திருந்தார்.
பாரம்பரிய உணவுகளை புதுமை சேர்க்கும் பரிமாணமாக அன்றைய தாத்தா,பாட்டி தயாரித்த உணவுகளை இன்றைய ரசனைக்கு ஏற்ப
ருசியுடன் புதுமையாக உருவாக்கும் முயற்சியாக அடைந்தது.
  புகழ் பெற்ற கல்லுக்கட்டி, ஆட்டுக்கால் வறுவல் கல்லுக்கட்டி ஆட்டுக்கால் சூப், உப்புக்கறி, மீன் குழம்பு, வீரன் கறிசோறு , கறி தோசை உடன் மதுரை எலும்பு வறுவல் , சிறுகிழங்கு கண்டல், சுட்ட மக்காசோளம், பொறிச்ச மீன் சாலட், கறி சுக்கா, சின்ன வெங்காயம், வாலை இலை அல்வா,சக்கர கட்டி ஆப்பம், கலர் பூந்தி, மற்றும் உணவே மருந்து என்பதன் மூலம் கருப்பு கவுனி அரிசி அல்வா, இளநீர் பன்ன கோட்டா, பனை கிழங்கு லட்டு, கருப்பட்டி சீஸ் கேக், கம்பு தயிர் சாதம், உப்புகளி, மாடக்குளம் நாட்டு கோழி மிளகு வதக்கல், சீரக சம்பா மட்டன் பிரியாணி, தல்லாகுளம் காரக் பொருக் கோழி, மட்டன் கோலா உருண்டை , பருத்தி பால், பணங்கற்கண்டு பால், வெஜ் கோலா உருண்டை , இளநீர் பாயாசம் என 65 வகையான பழமை  உணவுகளை இன்றைய மக்கள் விரும் வகையில் புதுவிதமாக தயாரித்து அதனை இந்த உணவு திருவிழாவில் பரிமாறப்பட உள்ளன.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *