தேனி- வேட்பாளர்களை தேடி அலையும் அதிமுக?

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11,24,313 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,49,826 ஆண்கள், 5,74,280 பெண்கள் மற்றும் 207 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது  இதில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1,34,566 ஆண் வாக்காளர்கள், 1,37,999 பெண் வாக்காளர்கள், 33 இதரர் என மொத்தம் 2,72,598 பேர் உள்ளனர்.

தற்பொழுது திமுக கட்சியின் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இருக்கிறார். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுலாத்தலமான வைகை அணை அமைந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் விவசாயம், கைத்தறி நெசவுத்தொழில் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் மகாராஜன் போட்டியிட வாய்ப்பு இல்லை  என்றும் அவருடைய மகன் சேது, வைகை சேகர்,வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முறுக்கு கோடை ராமர் அல்லது கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த லோகிராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக வெற்றி வாய்ப்புகள் இழுபறி சூழ்நிலை உள்ளது. பெரியகுளம் தொகுதியில் 1,37,898 ஆண் வாக்காளர்கள், 1,43,262 பெண் வாக்காளர்கள், 104 இதரர் என 2,81,264 பேர் வாக்காளர்களாக உள்ளனர். பெரியகுளம் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக சரவணன் இருக்கிறார்.

இந்த பகுதியில் விவசாயம் மற்றும் மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பட்டியல மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்காமல் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக திமுக வேட்பாளராக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,  பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து அன்பழகன்,
ஜீவா,டாக்டர் பாண்டியராஜன் உள்ளிட்ட நான்கு பேரில் ஒருவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் இல்லை. ஆனால் அதிமுக சார்பில் வழக்கறிஞர் கருப்பசாமி அல்லது வழக்கறிஞர் தவமணி ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

திமுகவிற்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது

 போடிநாயக்கனூரில் 1,32,587 ஆண் வாக்காளர்கள், 1,38,778 பெண் வாக்காளர்கள், 22 இதரர் என 2,71,387 பேர் வாக்காளர்களாக உள்ளனர். முன்னாள் முதல்வர் அதிமுக கட்சியில் சேர்ந்த ஓபிஎஸ் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

போடி சட்டமன்ற தொகுதியில் விவசாயம் ஏலக்காய் மா காபி உள்ளிட்டவைகள் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிமுக சார்பில் எம்பி தேர்தலில் தோல்வியடைந்த நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவிற்கு  வெற்றி வாய்ப்புகள் உள்ளது

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,37,360 ஆண் வாக்காளர்கள், 1,43,592 பெண் வாக்காளர்கள், 34 இதரர் என 2,60,986 பேர் உள்ளனர். கம்பம் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் இருக்கிறார்.

கம்பம் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் திராட்சைகளை பதப்படுத்தும்  தொழிற்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை

திமுக சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் அவருடைய மகன் வசந்தன், ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ செல்வேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில் ஜக்கையன் அல்லது ஜக்கையன் மகன் பால மணிபார்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், அருண்குமார் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவிற்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது

தேனி மாவட்டத்தில் அதிமுக கட்சிக்கு வேட்பாளர்களை தேடி அலையும் சூழ்நிலையை தற்பொழுது நிலவி வருகிறது.

  • ஜெயபால்