இராணிப்பேட்டையா… ஆற்காடா திமுகவுக்கு தீராத தலைவலி எஸ்.எம். சுகுமார்…?

கட்சியில ஆயிரம் பிரச்சனை கூட்டணிக்குள் குடைச்சல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இராணிப்பேட்டை ஆற்காடு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு மாவட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கட்சிக்குள் தங்கள் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் இறங்கிவிட்டனர் மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.எம்.சுகுமார் மாவட்டத்தில் அதிமுகவினரோடு உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பெரிய ஒப்பந்ததாரர் (ஏ கிளாஸ்) பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் எஸ்.எம்.சுகுமார் செலவு செய்வதில் தாராளம் காட்டுகிறார் அதனால் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இருப்பதை பார்க்க முடிகிறது.

காலையில் எஸ்.எம்.சுகுமாரை எழுப்புவதே கட்சியினரும் பொதுமக்கள் தரப்புதான்! நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள், நன்கொடை கேட்பவர்கள் பள்ளி கல்லூரி சேர்க்கை இப்படி நீளும் வந்திருப்பவர்களின் கோரிக்கைகள் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்தோடு செய்துகொடுக்கிறார். மாற்று கட்சியினரும் எஸ்.எம்.சுகுமார் இல்லம் தேடி வருகிற நிகழ்வுகளும் சாதாரணமாக நடக்கிறது. இந்தமுறை நீங்க இராணிப்பேட்டையிலதான் நிற்கனும், அதெல்லாம் வேண்டாம் ஆற்காடு தொகுதிதான் சரியாக இருக்கும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் விருப்பங்களை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளும் எஸ்.எம்.சுகுமார் உண்மையிலேயே தன் மனதிற்குள் தான் போட்டியிடப்போகும் தொகுதியை தேட ஆரம்பித்துவிட்டார்.

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள போகும்போது அனைத்து தரப்பினரிடமும் பேசி பல்ஸ் பார்க்கிறார். ஆனால் கடந்த தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் கிடைத்த கசப்பான அனுபவங்களை எஸ்.எம்.சுகுமார் மட்டுமல்ல அதிமுகவினரும் மறக்கவில்லை.
தான் போட்டியிட்ட இராணிப்பேட்டை தொகுதியிலும் தன்னை தேடி வந்து நன்கொடை கேட்ட தோழமை கட்சியினர், மாற்று கட்சியினர் என அனைத்து தரப்பிற்கும் மிகப்பெரிய அளவில் பணத்தில் தாராளம் காட்டியவர், இராணிப்பேட்டையில் தோற்றும்போனார் அதற்கு காரணமாக, அதிமுக நிர்வாகிகள் சிலரும், இஸ்லாமிய ஓட்டுக்களும் என்று சொல்லப்பட்டது. தன்னுடைய மகன் கோபிக்கு இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட அவைத் தலைவர் பதவி வாங்கி கொடுத்து அங்கீகாரப்படுத்தியிருக்கிறார்.

மேற்கு மாவட்ட செயலாளர் ஆகி இரண்டு வருடங்களை கடந்துவிட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருப்பதால், எஸ்.எம்.சுகுமார் விரும்பும் தொகுதி கிடைக்கும் என்கிற நிலையில், அண்ணே எங்க தொகுதிக்கு வந்திடுங்க என்று ஆற்காடு அதிமுகவினர் மத்தியில் அழுத்தமான அழைப்பு! மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்தோடு கோவையிலிருந்து எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பிக்க அன்றைய தினமே மருதமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டுமென்று தன்னுடைய ஆதரவர்களுடன் சென்று பூஜை செய்து எழுச்சி பயணத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.

இராணிப்பேட்டை தொகுதியில அமைச்சராக இருக்கும் காந்தி ஏகப்பட்ட அவப்பெயரோடு காலம் தள்ளிக்கொண்ருக்கிறார் ஆற்காட் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்து நிற்கிறார். அதனால எஸ்.எம்.சுகுமார் பண்ற செலவுக்கு இரண்டு தொகுதிகளும் ஓகேதான் இராணிப்பேட்டை தொகுதியில மட்டும் முஸ்லீம் ஓட்டுக்களை நம்பமுடியாது மற்றபடி ஆளுங்கட்சியினர் மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்தியை எளிதாக அறுவடை பண்ணிடலாம் என்று அதிமுகவினர் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து இராணிப்பேட்டையா… ஆற்காடா… எந்த தொகுதியில் நிற்கலாம் என்கிற தீவிர தேடுதல் மனநிலையில் எஸ்.எம்.சுகுமார் வலம் வந்துகொண்டிருக்கிறார். எந்த தொகுதியில் நின்றாலும் இவருக்கு தகுந்த வேட்பாளரை திமுக தேட வேண்டி இருக்கும் என்பது மட்டும் உண்மை. மொத்ததில திமுகவுக்கு எஸ்.எம்.சுகுமார் தீராத தலைவலிதான்.

உளவுத்துறை, பென் டீம், ஐபேக் உள்ளிட்டவர்கள் திமுகவினர் நிலவரங்களை கவனிப்பதோடு எஸ்.எம்.சுகுமாரையும் கவினக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. இராணிப்பேட்டை, ஆற்காடு இரண்டு தொகுதியிலும் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறார் எந்த தொகுதியை எஸ்.எம்.சுகுமார் குறி வைக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

  • ஆலவாயர்