கடலூர்… கள்ளநோட்டு வழக்கில் கைதானவர் பண மோசடி…

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஆன இவருக்கு  சொந்தமான இடத்தில் கடந்த மார்ச் மாதம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த செல்வம் சுமார் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா ஆவினங்குடியைச் சேர்ந்த ராமர், கோழியூரைச் சேர்ந்த இளங்கோவன், மோசட்டையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம், தங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், இதேபோல் மேலும் சிலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் புகார் மனுவில்  தெரிவித்தனர். கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் விசிக பொறுப்பாளர் மீது மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • முருகன் லட்சுமணன்