கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த ஒன்றாம் தேதி சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்ததாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.
மீண்டும் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ள கொரோனாவால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
- முருகன் லட்சுமணன்