கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மூதாட்டி தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் கடலூர் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று குற்றவாளியை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
எஸ் கே பாளையத்தை சேர்ந்த சுந்தரவேல் என்பவரை பிடித்து முற்பட்டபோது குபேரன் என்ற காவலரை சுந்தரவேல் கையில் வெட்டிய நிலையில் குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார் மேலும் குற்றவாளி சுந்தரவேல் மீது நான்கு கொள்ளை வழக்குகள் உள்ளது, மது போதையில் இது போன்ற செயலியில் ஈடுபட்டதாக குற்றவாளி ஒப்புக்கொண்டு உள்ளார் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி.
- முருகன் லட்சுமணன்
