மகன் வாங்கிய கடனுக்கு, தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்… – கடலூர் பரப்பரப்பு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் 71 வயதான  நடராஜன் இவரது மகன் மணிகண்டன் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் அந்த ஆறு லட்ச ரூபாயை 67 லட்ச ரூபாயை ஆக கடன் கொடுத்த  பழனிச்சாமி கேட்டதாகவும் தெரிய வருகிறது. அதனை கொடுக்க முடியாத மணிகண்டன் மற்றும் நடராஜன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் அவர்களை தேடி கண்டுபிடித்த பழனிச்சாமி ஆதரவாளர்கள் நடராஜனை கடுமையாக தாக்கி கைவிரலை வெட்டிய நிலையில் காரில் கடத்தியுள்ளனர் இதுகுறித்து நடராஜன் மகள் சீர்காழியில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்,

இன்று காலையில் சீர்காழியில் இருந்து கடத்தி கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதிக்கு வருவதாக தெரிந்த நிலையில் கடலூர் முதுநகர் போலீசார் அங்கே வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்

பழனிச்சாமி ஆதரவாளர்கள் தாக்கியதில் நடராஜன் படுகாயம் அடைந்த நிலையில் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
நடராஜன் கடுமையாக தாக்கப்பட்டு அவரது கைவிரலும் துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
நடராஜன் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்பொழுது பிடிபட்டுள்ள ஐந்து பேரிடமும் கடலூர் முதுநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கொடி கட்டிய காரில் இவர்கள் கடத்தி வந்த நிலையில்
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன் தன்னை கந்து வட்டி கும்பல் கடத்திவிட்டதாகவும் 6 லட்ச ரூபாய்க்கு 67 லட்ச ரூபாய்க்கு கேட்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

போலீசார் விசாரணையில் கந்து வட்டிக்காக கடத்தலில் ஈடுபட்ட
பழனிச்சாமி சகோதரர் சக்திவேல் – 40,
பாண்டியன் – 51 (திமுக -கிழக்கு ஒன்றிய பிரதிநிதி குமராட்சி), பன்னீர்செல்வம் – 70,
தேவநாதன் – 60, மரிய செல்வராஜ் – 63 ஆகிய ஐந்து பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய திமுக பிரமுகர் பாண்டியன் கார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரல் வெட்டப்பட்ட சம்பவம் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • முருகன் லட்சுமணன்