வீரபாண்டி பேரூராட்சி- தீண்டாமை தடுப்புச் சுவர்… உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் தீண்டாமை தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் வீட்டடி மனை அமைப்பதற்காக ஹரிஹரசுதன் என்பவர்
தேனி நகர மற்றும் ஊரமைப்பு துணை இயக்குனரிடம் அனுமதி பெற்றுள்ளார்.

இதன் அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சாலையை மரித்து தடுப்பு சுவர் கட்டியும், எஸ்சி, எஸ்டி காலனி மக்கள்  சாலையை பயன்படுத்துவதைத் தடுத்தும்
கழிவு நீர் சாக்கடை செல்ல விடாமல் அடைத்துள்ளார்.

எனவே, வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் தீண்டாமை தடுப்பு சுவர் மற்றும் கழிவுநீர் கால்வாய்  அடைப்பை அகற்ற, மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

வீட்டடி மனை அமைத்துள்ள ஹரிஹரசுதன் தலைமைக் காவலர்,
தமிழ்நாடு துணைக் காவலர் பணி நடத்தை விதிகளின்படி, துறை அனுமதி பெறாமல் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் வீட்டடி மனை அமைத்து முறைகேடு செய்துள்ளார்.

பொது சொத்து மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் கால்வாய்  அடைப்பு  குறித்து
 தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

  • ஜெயபால்