தமிழகம்- இன்றும் எமெர்ஜென்சி இருக்கிறது… நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்… பாஜக வெற்றிவேல்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி எனும் அவசர நிலை பிரகடன படுத்திய நாளின் 50 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இருண்ட நினைவுகள் தின கருத்தரங்கு மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்கப்பெருமாள், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைமை செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்,
கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற அவரச நிலை பிரகடன நாளின் 50 வது ஆண்டை முன்னிட்டு அந்த நினைவுகள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழ்நாடு முழுவதுமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.,
1975 முதல் 1977 வரை எமெர்ஜென்சி காலகட்டத்தில் எந்த அளவிற்கு கொடுமைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று கண்காட்சியாகவே வைத்திருக்கிறோம்.
இந்த வகையில்,
 இன்று தமிழகத்தில் எந்த அளவு எமெர்ஜென்சி இருக்கிறது, எதிர்கட்சிகள் நசுக்கப்படுகிறார்கள் என இரண்டையும் ஒப்பிட்டு மக்கள் திராவிடத்திற்கு எதிராக 2026 தேர்தலில் பாஜக தேசியத்தின் பக்கம் என விரட்டியப்பதை சொல்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்றும் எமெர்ஜென்சி இருக்கிறது., எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தமிழகத்தின் எதிர்கட்சிகள் நீதிமன்றத்தை நாடித்தான் அனுமதி பெற வேண்டி உள்ளது.,
எதிர்கட்சிகளை நீதிமன்றத்திற்கு சென்று அலைக்கழிப்பு செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது.
2026 தேர்தல் தேசியத்தின் பக்கம் கொண்டு போகிற வகையில் பிரதமர் எப்போதுமே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் வளர்ச்சியை நோக்கி 2047 என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.
அண்ணாமலை சுற்றுப்பயணம் குறித்து தலைமை முடிவெடுக்கும், எங்களது சுற்றுப்பயணம் 2047 வளர்ச்சியடைந்த பாரதம் என்ற விஷயத்தை கொண்டு செல்லும் நிகழ்வு வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ளது என,
 பேசினார்.

  • நா.ரவிச்சந்திரன்