Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இனிமேல் நல்லதம்பி படம் ஓடாது…?

இனிமேல் நல்லதம்பி படம் ஓடாது…?
– திருப்பத்தூர் திமுக நிலவரம்!
மாடப்பள்ளி அண்ணாதுரை மகன் நல்லதம்பி இரண்டாவது முறையாக திருப்பத்தூர் எம்எல்ஏ ஆகி இருக்கிறார் முதல்முறை எம்எல்ஏ ஆனபோது அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர், என்னால என்ன செய்ய முடியும்? நான் எதிர்கட்சி எம்எல்ஏ என்று திமுகவினரிடமும் தொகுதி மக்களிடமும் வாய்ப்ந்தல் போட்ட நல்லதம்பி பேன்ட் சர்ட் தொப்பி சகிதம் ஆட்டோவில் பயணம் செய்து, எடப்பாடி பழனமிச்சாமியை பார்த்து ஆதாயம் அடைந்த கதையை திருப்பத்தூர் தொகுதி திமுகவினர் நம்மிடம் பேசும்போது நினைவுபடுத்துகின்றனர் திருவண்ணாமலை அமைச்சர் எ.வ.வேலுவின் விரல் நீட்டலில் பொது வாழ்க்கைக்கு அடையாளம் காட்டப்பட்ட நல்லதம்பி எ.வ.வேலுவை அப்பா என்றே அழைக்கிறார். அதில் பாசம் இருக்குதோ இல்லையோ தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தாராளமாக பயன்படுத்துகிறார். அதனால, திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் எ.வ.வேலு பெயரும் நல்லதம்பி எம்எல்ஏ பெயரும் திருபத்தூரில் அதிருப்தியில் மிதக்குது. அருணா கான்ட்ராக்ட் நிறுவனத்தின் உரிமையாளரான நல்லதம்பிக்கு கூடவே பத்து பினாமி காண்ட்ராக்டர்கள் நிழல்போல தொடருகிறார்கள். கோடிகளில் வேலை செய்கிறார் அமைச்சர் எ.வ.வேலு பெயரைச்சொல்லி பெரும்பான்மை வேலைகளை தட்டிப்பறிக்கிறார். தேவைப்படாத இடங்களில்கூட அப்பா சொல்லிட்டார் என்று திமுக நிர்வாகிகளையும் அதிகாரிகளையும் மிரளவிடுகிறார்.
இரண்டாவது முறை எம்எல்ஏ ஆனவுடன் மாவட்ட செயலாளர் அமைச்சர் பதவி மீது தீராத காதல் கொண்டவர், இதோ சீக்கிரம் நான் மாவட்ட செயலாளர் ஆகிடுவேன் அமைச்சர் ஆகிடுவேன்னு வாயால வடை சுட்டுகிட்டு இருந்தார். நாளடைவில் அலுத்துவிட்டது போல, வியாபாரத்தில தீவிரமாகி பணம் பண்ணுவதில் தீவிரமாகிவிட்டார். தொகுதியில திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு ரொம்ப கம்பி, அதை வெளியில காட்டிக்காம காலம் தள்ளுகிறார். மாவட்டம் தேவராஜை ஏன் என் தொகுதிக்குள்ள வர்றீங்க… தொகுதியில எல்லாம் நான்தான் என்று அஸ்கி வாய்ஸ்ல போன்ல பேசுவார் ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும் தேவராஜ் ஆஜராகிவிடுவார். திருப்பத்தூர் நகரத்தில நல்லதம்பி அரசியல் பண்ண முடியாது அங்கே வழக்கறிஞர் ராஜேந்திரன் அனுமதி தேவை இப்ப மாவட்ட துணை செயலாளராக டி.கே.மோகன் முறைக்கிறார் இவர் அமைச்சர் துரைமுருகன் கம்பெனியில் நல்லா சம்பாதிச்சி செட்டிலானவர், திடீர்னு எ.வ.வேலு கம்பெனிக்கு ஆதரவாளரா மாறிட்டார்னு திருப்பத்தூர் நகர திமுகவில் சிரிப்பலை! இவங்களை தாண்டி நான் தொகுதி எம்எல்ஏ என்று நல்லதம்பி வீராப்பு காட்டுகிறார் ஆனால் அவர் படம் ஓடல.
திருப்பத்தூர் ஒன்னிறியத்தில கிழக்கு திருப்பதி, மேற்கு நல்லதம்பி செயலாளர்கள், விஜயா அருணாசலம் யூனியன் சேர்மன், திருப்பதிக்கு விபூதி அடிச்சிட்டு மற்றவங்க கூட்டு சேர்ந்து கும்மி அடிக்கிறாங்க. கந்திலி கிழக்கு மோகன்ராஜ், மேற்கு முருகேசன், மத்தியம் குணசேகரன் என்று மூன்று ஒன்றிய செயலாளர்கள். திருமதி திருமுருகன் யூனியன் சேர்மன், மூன்று ஒன்றிய செயலாளர்களை கையில் வைத்துக்கொண்டு திருமதி திருமுருகனை மிரட்டுவார் நல்லதம்பி, சரியா வரலைனா துணை சேர்மன் மோகனை தூண்டிவிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஏற்பாடு பண்ணுவார் இப்படி மிரட்டி சம்பாத்தியம் உருவாகுது ஆனால் குரும்பேரி ராஜா, நல்லதம்பி விவகாரங்களை புலனாய்வு செய்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்து மிரள வைக்கிறார்.
திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உபயம் நகர செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன், இவர்களின் ஒற்றுமை சமீபத்தில் உடைந்துபோக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சங்கீதா வெங்கடேசன் முறையிட, நல்லதம்பி டி.கே.மோகன் இருவரும் நகரமன்ற தலைவருக்கு பக்கபலமா இருங்கனு சொல்லிட்டார். ஆனா இவங்களும் வருமானத்தில் குறியாக இருக்க, இந்த உறவுகளும் உடைஞ்சி போச்சி! லேட்டஸ்ட் நிலவரப்படி நல்லதம்பி நகர செயலாளர் ராஜேந்திரன் அலுவலகத்தில் ஆஜராகி கை குலுக்கியதோடு, நிகழ்ச்சிகளுக்கு ராஜேந்திரனை கூட்டிகிட்டு போறார் என்ன காரணம்னு தெரியல, எலி நிர்வாணமா குறுக்க மறுக்க ஒடுது என்று சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். நல்லதம்பியின் ஒரே ஆதரவாளரான முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு லேட்டஸ்ட் நிலவரப்படி நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் ஆதரவாளராக மாறிட்டார்.
காலையில் குளித்து முடித்து ரெடியானவுடன் நல்லநேரம் முடியறதுக்குள்ள பூமி பூஜைகளை முடிப்பார். அப்புறம் அரசு நிகழ்ச்சிகள் இருந்தால்…, எம்எல்ஏ ஆபீஸ் பக்கம் போறதில்ல அது பாழடைஞ்சி கிடக்கு, ஈத்கா மைதானத்தில சொந்த ஆபீஸ்ல உட்கார்ந்திடுவார். அதிகா£ரிகள், பஞ்சாயத்து, பிரச்சனை, சிபாரிசு, எல்லாம் வரிசையா வரும் முடிச்சி தர்றேன்னு சொல்லுவார் அதில தனக்கு ஆதாயம் உள்ள விஷயங்களை மட்டும் டீல் பண்ணுவார் அதை அண்ணாதுரை எம்பி ஆபீஸ்ல உட்கார்ந்து பேசி முடிப்பார் இதெல்லாம் நல்லதம்பியின் நடவடிக்கைகள்.
ஏலகிரியில் ரிசார்ட்ஸ், பூந்தமல்லி ஆரணி, காட்பாடி, வேலூர் ஜவ்வாதுமலை திருப்பத்தூர் இங்கெல்லாம் சொத்துக்கள் வேகமாக வளருது. மாப்பிள்ளை சபரீசன் ரூட்ல பயணம் பண்ண ஆரம்பித்திருக்கிறார். மூன்றாவது முறையாக எம்எல்ஏ சீட் வாங்கிடனும்னு ஆவலோடு இருக்கிறார். முப்பத்தி ஐந்து வருடம் நகர செயலாளர் நான் என்ன தக்காளி தொக்கா… வழக்கறிஞர் ராஜேந்திரன் கர்ஜிக்கிறார். நகராட்சி வைஸ் சேர்மன் ஷபியுல்லா ஏன் நான் கேட்க கூடாதா? நானும் கேட்பேன் என்று குரல் எழுப்புகிறார். மாவட்ட துணை செயலாளர் டி.கே.மோகன் என்கிட்ட பணமிருக்கு இந்த முறை விடமாட்டேன் என்கிறார்.
மொத்தத்தில நல்லதம்பி டல்லடிக்கிறார் அடுத்த எம்எல்ஏ சீட்டுக்கு தயாராகி நிற்கும் வழக்கறிஞர் ராஜேந்திரன், வைஸ் சேர்மன் ஷபியுல்லா, டி.கே.மோகன் உள்ளிட்டவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
-ஆலவாயர்