உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்… – அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அரசின் சார்பாக ஏழை எளிய மூன்று ஜோடிகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி திருமணம் செய்து வைத்து சீர்வரிசை பாத்திரங்களை பார்வையிட்டு புதுமண தம்பதியினருக்கு வழங்கினார். அதன் பின்னர் பொன்னமராவதியில் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட கிராமப்புற வழித்தட பேருந்துகள் இரண்டினை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில்

தமிழக முதலமைச்சர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கொன்னையூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் ஏழை எளிய மூன்று ஜோடிகளூக்கு அரசின் சார்பிலே கட்டணங்கள் எதுவும் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு, சீர்வரிசை பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

 பொன்னமராவதி அரசு பணிமனை போக்குவரத்து கழகத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு  நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்று புதிய வழித்தடங்களுடன் இயக்கப்பட்டன அதனை  இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருச்செந்தூர், கோவை,சேலம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விரைவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொன்னமராவதி பகுதி மக்களின் தேவைகளை உணர்கின்ற முதல்வராக இருந்து விரைவில் அதையும் நிறைவேற்றுவார்.
கடந்த 10 ஆண்டுகளில் அண்ணா திமுக அரசு பல்வேறு பேருந்துகளை நிறுத்தியது

மக்கள் நலனில் அக்கறை கொள்கின்ற அரசாக திமுக அரசு எந்த வகையில் இருந்து வருகிறது என்ற கேட்ட கேள்விக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில், கடந்த 10 ஆண்டுகளில் அண்ணா திமுக அரசு நிறுத்திய பல்வேறு பேருந்துகளை, வழித்தடங்களை முடக்கியது, மக்கள் போக்குவரத்து வசதியை நிறுத்தியது. திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் பேருந்து வசதிகளை அதிகரித்தார் புதிய பேருந்து நிலையங்களை உருவாக்கி தந்தார் . மகள் இருக்கு விடியல் பயணம் மூலமாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் விடியல் பேருந்து உருவாக்கித் தந்தவர். போக்குவரத்து துறையில் ஒரு மறுமலர்ச்சி உருவாக்கி தந்தவர் இன்றைய தினம் ஒரு பஸ் ஒழுங்காக செல்ல வேண்டும் என்றால் சாலைகள் ஒன்றாக இருக்க வேண்டும் அதற்காக கிராம சாலைகள் திட்டத்தை கொண்டு வந்து இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே கிராம சாலைகள் திட்டத்தின் மூலமாக 500 பேர் ஆயிரம் பேர் இருக்கக்கூடிய கிராமப் பகுதியில் கூட போக்குவரத்திற்கு சாலைகளை உருவாக்கி இன்று பேருந்துகள் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டோம் என்று சொல்ல முடியாது அதிகப்படியாக செய்தது தளபதியினுடைய அரசு, மிக மிக குறைந்த அளவில் செய்த அரசு எடப்பாடியின் அரசு இதுதான் அந்த அரசுக்கும் இந்த அரசுக்கும் உள்ள வித்தியாசம்.

காவலர் அஜித் இறப்பிற்கு தொலைபேசி வாயிலாக சாரி என்ற கேட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விஸ்தரித்து வருவதற்கு கனிம வளங்கள் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் ஒரு குற்ற சம்பவங்கள் நடந்த பிறகு அந்த குற்றச்சம்பவம் வருந்தத்தக்க ஒன்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அந்த குடும்பத்திலே அவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பது ஆறுதல் படுத்துவது தமிழருடைய வாடிக்கை பண்பாடு தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து வரும் பழனிச்சாமிக்கு இந்த பண்பாடு எல்லாம் தெரியாது. நம்முடைய தமிழக  முதலமைச்சரவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி வருத்தம் தெரிவித்திருக்கிறார் வருத்தத்திற்கு மறு பெயர் தான் சாரி. சாரி என்று சொன்னால் அதற்கு வருத்தம் என்றுதான் அர்த்தம் வருத்தத்தோடு உங்களை நான் தொடர்பு கொள்கிறேன் உங்களுக்கு ஏற்பட்ட கூடிய இந்த தூக்கம் யாருக்கும் ஏற்படக்கூடாது . அதற்கு நான் வருத்தப்படுகிறேன் இதற்கு உரிய நடவடிக்கை நான் எடுக்கிறேன் என்று சொல்லக்கூடிய தைரியமிக்க முதலமைச்சர் . எடப்பாடி பழனிச்சாமி போல நான் பார்க்கவில்லை தெரியவில்லை, கம்பளைண்ட் கொடுத்தால் பார்ப்போம், சாக்கு போக்கு சொல்லுகின்ற முதலமைச்சர் ஆக இல்லை இன்றைய முதலமைச்சர் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். வருத்தம் தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது அது தமிழருடைய பண்பாடு அது அவருக்கு தெரியாது.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருவதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால் ரகுபதி அதில் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி அள்ளி விடுவார் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டுகளையும் உடனடியாக அவருக்கு பதிலடி தரப்பட்டு வருகிறது . பல்வேறு அமைச்சர்கள் எங்களது தலைமை கழக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி வருவது  பொய்யானது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நாங்கள் பதிலடி கொடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் நான்காண்டு சாதனையாக பார்க்கப்பட்டு வருவது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மகளிர் காண விடியல் பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அதேபோல இல்லம் தேடி கல்வி மூலம் படிப்பை இடையில் நிறுத்தி உள்ளவர்களை மீண்டும் கல்வி கற்கும் வகையில் உயர்கல்விலே சேர்த்து இருக்கின்ற திட்டம், இன்று தமிழகத்திலேயே நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஐபிஎஸ்,ஐஏஎஸ் எண்ணிக்கையை 58 க்கு மேல் நமது முதலமைச்சர் உயர்த்தி இருக்கிறார். மருத்துவம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற காவலர் லாக்கப் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு

உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் அதுபோல தப்பு செய்தவர்கள் வருத்தப்பட்டு தான் ஆக வேண்டும் காவலர்கள் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும் அதை தீர்மானிக்க வேண்டியது நாங்கள் அல்ல நீதிமன்றம் என்று
சிவகங்கையில் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.

  • ம.மு.கண்ணன்