அப்பா சேர்மன்..
மகன் ஒப்பந்ததாரர்…
ஒலக்கூர் யூனியன் உய்யலாலா…
திண்டிவனம் மைலம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை சொந்தம் கொண்டாடும் ஒலக்கூர் யூனியன் பதினாறு கவுன்சிலர்களை கொண்டது ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாங்கை சொக்கலிங்கம்தான் சேர்மன் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் வைஸ் சேர்மன் இருவரும் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள். ஒலக்கூரில் திமுகவினர் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஞானவேல், தனக்கு கவுன்சிலராக போட்டியிட சொக்கலிங்கம் மறுத்ததால் சுயேட்சையாக நின்று திமுகவை தோற்கடித்து ஞானவேல் வெற்றிபெற்றார் கடைசியில சொக்கலிங்கம் சேர்மன் ஆகிறதே மெஜாரிட்டி இல்லாமல் சிக்கலாகிவிட்டது. கடைசியில் மாவட்ட செயலாளர் மஸ்தான் ஞானவேலை சரிபண்ணி தன்னோடு வைத்துக்கொள்ள ஒரு வழியாக பாங்கை சொக்கலிங்கம் ஒலக்கூர் சேர்மன் சீட்ல உட்கார்ந்தார்.
சட்டத்தை சட்டை பண்ணாமல் யூனியனில் விதி மீறல்களை விருப்பமுடன் செய்ய ஆரம்பித்தார் சொக்கலிங்கம் முதல் வேலையாக திமுகவினரை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டார் குறிப்பா ஞானவேல் இவர் வளர்ந்தால் தன்னுடைய அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்று ரொம்பவே பயப்பட ஆரம்பித்தார். வைஸ் சேர்மன் ராஜாராமுக்கு நாக்குல லேசா ஜவ்வாதுமலை தேனை தடவிட்டு, மொத்த அதிகாரத்தையும் காட்டுத்தனமாக பயன்படுத்த ஆரம்பித்தார். மகன் செந்தில் பெயரில் ஒப்பந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தார். யூனியனில் ஒத்துழைக்காத அதிகாரிகளை நேரிடையாகவே மிரட்ட ஆரம்பித்தார். பனையூர் ஜெயகிருஷ்ணன் என்பவர் இதெல்லாம் தப்பில்லையா? என்று நீதிமன்றத்தை நாட, சொக்கலிங்கத்திற்கு சிக்கல் அதிகமானது தற்சமயம் வழக்கு நிலுவையில் இருக்கிறது சேர்மன் பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வரை கையை பிடித்து காலை பிடித்து லட்சங்களை வாரி இறைத்து சேர்மன் பதவியை காப்பாற்றிக்கொண்டார். ஒலக்கூர் ஒன்றியத்தில திமுகவினரை மிரள விடுகிறார் உடன்பிறப்புகளும் உற்சாகமிழந்து சோர்வடைந்து கிடக்கின்றனர். மாவட்டத்தில் எல்லா ஒன்றியங்களையும் மூன்றாக பிரிச்சாச்சி ஒலக்கூர் ஒன்றியம் மட்டும் இரண்டாகவே இருக்கு. இதை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று திமுகவினர் மத்தியில் குரல் உயர்வதை தடுப்பதற்கில்லை புதியதாக உருவாகும் ஒலக்கூர் மத்திய ஒன்றியத்திற்கு ஞானவேலை அடையாளம் காட்டினால் சரியாக இருக்கும் என்று பேசுகின்றனர். விஷயம் மாவட்டம் மஸ்தான் வரையில் போயிருக்கிறது.
அது சரி பாங்கை சொக்கலிங்கம் மனைவி சீத்தா திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் நின்று எம்எல்ஏவாகி ஏகப்பட்ட அவப்பெயரை சம்பாதித்தவர், மீண்டும் நின்று தோற்றுப்போனவர் இவங்க குடும்பத்துக்கிட்டேயா ஒலக்கூர் யூனியனை ஒப்படைச்சீங்க? கடந்த சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்க ஓட்டு குறைந்துள்ளதை உடன்பிறப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர் என்ன செய்யப்போகிறார் மாவட்டம் மஸ்தான்? பொறுத்திருந்து பார்ப்போம்.
– வில்வன் வேம்பன் அரசன்
—
Iniyavan, M.A.,