புறா கூண்டு கடைகள்?
புலம்பும் சோளிங்கர் வர்த்தகர் சங்கம்!
– நகராட்சி நிர்வாகம் நெருக்கடி
நகரமன்ற தலைவர் பதவியின் ஆயுள் முடிவை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்க, அதற்குள் கடைசி வசூலாக புது பஸ் ஸ்டாண்ட் டெண்டர் விட்டு, அந்த பணத்தையும் எண்ணிப் பார்த்துவிட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார் அசோகன் இவர் யாருங்க? தமிழ்செல்வியோட கணவர்! அவங்க யாருங்க? இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தலைவர், பெயருக்குதான் தமிழ்செல்வி தலைவர் எல்லாம் அசோகன் துணை தலைவர் வேண்டாபழனி, கமிஷ்னர் கன்னியப்பன் மயம்தான்! இவங்க மூவருக்கும் உள்ளூர்ல ஏகப்பட்ட கெட்ட பெயர் சோளிங்கர் நகரம் நகரத்தை சுற்றி எந்த வேலையா இருந்தாலும், அசோகன் பினாமி பெயரில் எடுத்து செய்வார் அவரின் பினாமிகளில் ஒருவர் வேண்டா பழனி! இவங்க கூட்டணி எடுத்து செய்த எந்த பணியும் உருப்படி இல்லை. அதிகாரிகள் மட்டுமல்ல உள்ளூர் மக்களும் சேர்ந்து திட்டி தீர்க்கறாங்க, இந்த கூட்டணியின் செயல்பாடுகளால் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஏகப்பட்ட அவப்பெயர் இதெல்லாம் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்திக்கு தெரியும் அசோகன் அவருடைய ஆதரவாளர் அதனால் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்கின்றனர் சோளிங்கர் நகரவாசிகள்.
பஸ் நிலைய வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்தின் மீது கடுமையான வருத்தத்தில் இருக்கின்றனர் புதிய பஸ் நிலையம் மற்றும் கடைகள் கட்ட, இருப்பவர்களை காலி பண்ண சொல்றாங்க, கட்டி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும் அதுவரை எங்கள் கதி? குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று அலறுகிறார்கள். அதுமட்டுமல்ல புறா கூண்டுகள் போல நிறைய கடைகள் கட்ட போறாங்களாம் வரைபட விவரங்களை கேள்விப்பட்ட வர்த்தகர் சங்கத்தினர் கொதிக்கின்றனர். 1967ல் சோளிங்கர் பஸ் நிலையம் உருவானது 3 ஏக்கர் 41 செண்ட் இடத்தில் பதினெட்டு கடைகள் தரை வாடகை கட்டிக்கணும், 1993ல் இருபத்தி இரண்டு கடைகளை ஏலம் எடுக்க ஆளில்லை. பதினைந்து கடைகள் மட்டும்தான் ஏலம் போச்சி. கொரோனா காலத்திற்கு பிறகு பஸ்கள் குறைந்துவிட்டது தனியார் கம்பெனி பஸ்களை நிறுத்திட்டாங்க, இப்ப தினமும் தொண்ணூறு பஸ்கள் மட்டும் வருது பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக உயர்ந்துவிட்டது. பஸ் நிலையத்தை விரிவாக்கம் பண்ணணும் என்கின்றனர் நகராட்சி தரப்பில்! 4.46 லட்சம் நிதி ஒதுக்கீடு பண்ணியாச்சி புது பஸ் நிலைய பூஜையை போட்டு கமிஷனை எண்ணி பார்த்திடனும்னு துடியா துடிக்கிறாங்க. பஸ் நிலையத்தையும் கடைகளையும் கட்டி முடிக்க இரண்டு வருஷம் ஆகும் அதுவரை நாங்களும் எங்கள் குடும்பமும் என்ன கதியாவது? இருக்கற பஸ் ஸ்டாண்ட்ல வேன்களை நிறுத்தி வச்சிருக்கறாங்க. பஸ் போக்குவரத்தும் பழைய மாதிரி இல்ல எதுக்கு இவ்வளவு அவசரம் காட்றாங்க? என்று பஸ் நிலைய வியாபாரிகள் புலம்பறாங்க அதெல்லாம் அசோகன் கூட்டணியினர் காதில் விழுந்த மாதிரி தெரியல அமைச்சர் காந்தி தலையிட்டு பேசினால் ஏதாவது நல்ல தீர்வு கிடைக்குமா- பார்ப்போம்.
– வில்வன் வேம்பன் அரசன்
Leave a Reply