திருப்பரங்குன்றம்- தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டண உயர்வு? எதிர்ப்பு தெரிவித்து இரண்டாயிரம் மாணவர்கள் போராட்டம்…

 திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு அதிகரித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கேட்டதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் வாசலில் , கல்லூரி முதல்வர் சந்திரன்  மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 இந்த பேச்சு வார்த்தையில் ,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்த நிலையில், தற்போது மின்சார கட்டணம் மற்றும் டியூஷன் பீஸ் ஆகியவை சேர்த்து 5500 ரூ வசூல் செய்வது அதிகமாக உள்ளது என்று, மாணவர்கள் கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்காத நிலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் .
தமிழக அரசு நிர்ணயித்த கல்லூரி கட்டணத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கல்லூரி வாசலில் கேட் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
பிறகு, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்
பட்டு, காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்  சந்திரன்  பேச்சுவார்த்தை நடத்தி பிறகு தங்கள் கோரிக்கைகளை மாணவர்களிடமிருந்து கல்லூரி நிர்வாகம் மனுவாக பெற்று பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
 இதனால், இந்த பகுதியில் காலையில் கல்லூரி வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

  • நா.ரவிசந்திரன்