வேலூர்- மக்கள் பணியில் ஆர்வமில்லாத மாநகராட்சி… கண்டுகொள்வாரா கலெக்டர்?

வேலூர் மாநகராட்சியில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மக்களுக்கான.. மக்களுக்காக… மக்கள் நலன், அடிப்படை வசதி குறைகளை மாமன்ற உறுப்பினர்கள் கூறும் பொழுது, மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் ஆணையர் ஆர்.லட்சுமணன் ஆகியோர்  சட்டவிரோதமாக, அராஜக செயல்பாட்டாலும் பத்திரிகையாளரை போட்டோ வீடியோ எடுக்க ஆட்களை ஏவிவிட்டு படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய தடை விதிப்பதும்,  போட்டோ மற்றும் ஒளிப்பதிவு செய்ய தொடர்ச்சியாக தடை விதிக்கும் மேயர் சுஜாதா அவர்களை பதவி நீக்கம் செய்ய மாநகர பொதுமக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்…

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா  அவர்களின் வார்டாக இருந்த போதிலும் அவர் இந்த பகுதிக்கு ஒரு முறை கூட வந்தது பார்க்கவில்லை, அந்த வார்டு பொதுமக்கள் குடிநீர், அடிப்படை வசதிகள் கூட செய்து தராத நிலையில் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்…

வேலூர் அருகே அடிப்படை வசதிகளை கேட்டு பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்… சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு…

வேலூர் மாவட்டம், முள்ளிபாளையம், கே.கே. நகர் பகுதியில் கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் செல்வதற்கான வழி இல்லை, மழைநீர் செல்வதற்கான வழி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அதிகரிப்பு…

தெருக்களில் சாலை அமைக்கப்படவில்லை எனவும், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லை எனவும்,

இதுபோன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அவர்களின் வார்டாக இருந்த போதிலும் அவர் இந்த பகுதிக்கு ஒரு முறை கூட வந்தது பார்க்கவில்லை என பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையின் இரு பக்கமும் மாட்டு வண்டிகளை நிறுத்தி
சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசல் அதிகரித்த நிலையில்.. சம்பவ இடத்திற்கு வேலூர் வடக்கு  காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், வேலூர் தாசில்தார் வடிவேல் ஆகியோர் பொதுமக்களிடம் அணுகு முறையை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலை மறியல் கைவிடப்பட்டது. இங்கு மட்டும் இல்லாத பல்வேறு இடங்களிலும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கோரிக்கைகளை மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதுபோன்று மக்கள் நலன் கருதி கோரிக்கை வைக்கப்படும் செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும், பத்திரிகையாளர்களுக்கு போட்டோ மற்றும் ஒளிப்பதிவு செய்ய தொடர்ச்சியாக தடை விதித்து வரும் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி நிர்வாகம், ஜனநாயகத்தின் நான்காம் தூணை முடக்க நினைக்கும் இவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கி மேயர் சுஜாதா அவர்களின் பதவியை நீக்க வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேலூர் மாநகர பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • ஆர்.மதன்