சேலம் மாவட்டத்தில தொகுதி மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாத அதிமுக எம்எல்ஏக்களில் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜெய்சங்கரும் ஒருவர், தொடர்ந்து சீட் கேட்டுகிட்டே இருந்தார் இந்தமுறை புத்திர கவுண்டன்பாளையம் இளங்கோவன் மூலமாக ஜெய்சங்கர் கனவு நனவாகி இருக்கிறது. பத்து பைசா பாக்கெட்ல இருந்து எடுக்கல, சீட்டையும் கொடுத்து செலவுக்கு பணத்தையும் கொடுத்து திமுக நிர்வாகிகளையும் கவனித்து ஜெய்சங்கரை ஜெயிக்க வச்சது இளங்கோவன்தான்! ஊர்ல இருந்தா நேரம் இருந்தா நல்லது கெட்டதுல கலந்துக்குவார், எம்எல்ஏ அலுவலகத்துக்கு எப்பாவது வருவார் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல அதிமுகவினருக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், பார்க்கலாம் தரிசனம் கிடைக்கும். இல்லாட்டி அலுவலகத்தில பாலு, குரு, இருவரும் இருப்பார்கள் கோரிக்கைகளை அவர்களிடம் சொன்னால் எம்எல்ஏ கவனத்திற்கு போய்விடும். திமுக நிர்வாகிகளோடு சுமூகமாக போய்விடுகிறார் அதனால ஆளுங்கட்சி தரப்புல ஜெய்சங்கருக்கு முழு ஒத்துழைப்பு! அதிமுக நகர செயலாளர் மோகன் ஆத்தூர் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எம்எல்ஏ அதனால மோகன், இளங்கோவன் உத்தரவு இல்லாம ஜெய்சங்கரிடம் எதுவும் நடக்காது என்கின்றனர். அதிமுக தலைமை கழக நிர்வாகி மகாலிங்கம் உறவினர் ஜெய்சங்கர் என்பது கூடுதல் தகவல்! கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காட்டும் ஆர்வத்தில் ஓட்டுபோட்ட மக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றனர் தொகுதிக்குள், தன்னுடைய வீட்டிற்கு பின்புறமாக ஐம்பது வருடங்களாக பயன்பாட்டில் இருந்த வழிதடத்தை வழிவிடாமல் தடுத்த விவகாரத்தில் ஜெய்சங்கருக்கு கொஞ்சம் கெட்டப்பெயர் அண்ணா கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தில தலைவராக இருக்கும் ஜெய்சங்கர் அலுவலகத்தை மனமகிழ் மன்றமாக்கி நண்பர்களோடு சீட்டு விளையாட்டில் பொழுதை கழிக்கிறார். ஜெய்சங்கர் ஓட்டு போட்ட மக்களை கண்டுக்கிறதில்ல அவங்களும் ஜெய்சங்கரை கண்டுகிறதில்ல இது ஒரு வித்தியாசமான ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் என்கிறார் உளவுத்துறை காவலர் ஒருவர். எனக்கு ஓட்டு போட்டா மட்டும் போதுமா? எங்க கட்சி ஆட்சி அமைக்கலியே அப்புறம் எப்படி நான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேத்தறது? கோபம் வந்தால் இப்படி பதில் சொல்லி சமாளிக்கிறாராம். லாரிக்காரன் எம்ஜிஆர் சிலையை இடிச்சிட்டு போயிட்டான் அதை கண்டிச்சி ஒருநாள் சாலை மறியல் பண்ணார் இதை வேண்டுமானால் நூறுநாள் சாதனையாக சொல்லலாம் மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply