வேலூர் தொகுதி கார்த்திகேயன் எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை

இராணிப்பேட்டை காந்தி மூலம் திமுகவில் உறுப்பினரான வேலூர் கார்த்திகேயனுக்கு நீதி கட்சிதான் பழைய அடையாளம்! இவரை செல்லமாக வேலூர் தொகுதிக்குள் கார்த்தி முதலியார் என்று செல்லமாக கூப்பிடுகின்றனர் ஒரு தரப்பினர். கட்சிக்குள் வந்த உடனேயே கவுன்சிலர், நகரமன்ற தலைவர், மாநகர மேயர், கடந்த முறை எம்எல்ஏ, இப்ப மறுபடியும் எம்எல்ஏ, கார்த்தியின் அரசியல் வளர்ச்சிக்கு பின்னால், இராணிப்பேட்டை காந்தியோடு திருவண்ணாமலை எ.வ.வேலுவும் இருப்பதாக சொல்லும் வேலூர் திமுகவினர் சுத்தமா படிப்பறிவு இல்லாதவர், கட்சிக்கு காலம் காலமாய் ஏராளமாய் செலவு பண்ணி உழைத்தவர்கள் பலர் இருக்க, இடையில வந்த கார்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள், எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்னு தெரியல? என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். கடந்த ஐந்து வருடம் எம்எல்ஏவாக இருந்தவர், ஊரில் இருந்தாலும் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை காண்ட்ராக்ட் வேலைகளை பினாமி பெயரில் கார்த்தியே செய்ததோடு திமுக நிர்வாகிகள் தொண்டர்களிடம் விலகியே இருந்தவர், தொகுதி மக்களோடு இணக்கமில்லை திமுகவினர் ஏக கடுப்பில் இருந்தனர். மறுபடியும் கார்த்திக்கு சீட் தரக்கூடாது என்று வேலூர் தொகுதியில் எதிர்ப்பலை முன்னாள் மந்திரி விஜய், மாவட்ட செயலாளர் நந்தகுமார் இருவரும் சீட்டு கேட்டு முட்டி மோத, மாவட்ட தலைநகர் வேலூரில் விஜய், நந்தகுமார் ஜெயித்தால் டாமினேஷன் பண்ணுவார்கள் அதனால, கார்த்திதான் டம்மியாக இருப்பார் என்று கணக்கு பண்ணி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்தமுறை டிக் அடித்துவிட்டார். கார்த்தி மீது கடுமையான அதிருப்திகள் இருந்தாலும் முஸ்லீம், கிறித்துவர், ஆதிதிராவிடர் ஓட்டுகள் மீண்டும் கார்த்தியை எம்எல்ஏஆக்கி அழகு பார்த்துவிட்டது. கடந்தமுறை போலவே இந்த முறையும் தன்னுடைய செயல்பாடுகளை தொடருகிறார் அதில் சிறு மாறுதல், அடிக்கடி தொகுதிக்குள் ஆய்வுப் பணி என்கிற பெயரில் நடமாடுகிறார் ஆனால் பல வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி தவிக்குது வேலூர் அதைப் பற்றி கார்த்தி நினைத்ததுபோல் தெரியவில்லை. மனுவோட கட்சியினரோ, தொகுதிவாசிகளோ போனால் வாங்கி படித்து பார்க்கமாட்டார், அருகில் இருக்கும் ஆதரவாளர்களிடம் கொடுத்துவிடுவார் ஓட்டல், லாட்ஜ், பைனான்ஸ், சீட்டு கம்பெனி என்று நிறைய தொழில்கள் இருக்கு அதை அக்கறை எடுத்து பார்க்கிறார். தனக்கு வேண்டப்பட்டவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்துக்குவார். இவரைப் பற்றி சொல்ல வேற எதுவும் இல்லை என்கின்றனர். கடந்த முறை போனது போகட்டும் இந்த ஐந்து வருடங்களாவது இவர் வெற்றிக்கு உழைத்த எங்களுக்கும், வேற வழியே இல்லாமல் மறுபடியும், மறுபடியும் ஓட்டுபோட்ட வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி விசுவாசத்தோட இருக்கனும் உங்க மூலமா வைக்கிற கோரிக்கை இது என்கின்றனர் மூத்த உடன்பிறப்புகள், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்ட தொடரில் கம்யூட்டரை எல்லா எம்எல்ஏக்களும் ஆன் பண்ணி பார்த்தாங்க இவரு அதை கூட செய்யல என்று சபாநாயகர் அப்பாவு கமெண்ட் அடித்தாராம். நூறுநாள் சாதனையா? அப்படீன்னா என்னங்க?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *