மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இளைஞர் எழுச்சி பயணம் கூட்டம், மேலூர் லட்சுமி திருமண மண்டபத் தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு,
இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.பி.ஏ. ராமசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாநில மனித உரிமை துறை தலைவர் மஹாத்மா சீனிவாசன்,
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் நூர்முகமது, தனுஷ் கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் திருமணி வரவேற்றார். இந்த கூட்டத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது ,அவர் கூறியதாவது:-இந்தியாவில் காங்கிரஸ் புது எழுச்சி பெற்றுள்ள து. காங்கிரசின் இன்றைய வளர்ச் சியை கண்டு இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சிக்
குவர
வேண்டு ம்,
மாணவர்
களுக்கு நல்ல கல்வியை ஆளும்
மத்திய அரசு தரவேண்டும், பெண்களுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத் துவம்
தரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பாசிச ஆட்சி வீழ்த்
தப்படவேண்டும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைய எல்லோரும் ஒன்றுபட்டுபாடு படவேண்டும். மேலும் மேலூர் பகுதியில், அரிட்டா
பட்டியை மைய்யமாக வைத்து 2500 ஏக்கர் விளை நிலத்தை வேதந்தா குழுமத்திற்கு ஏலம் விட முயற்சி
செய்து, ஏழை விவசாயிகள் வாழ் வாதாரத்தை முடக்கி, பல்லுயிர் தளத்தை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் ஏதேச்சிகாரத் தை முறியடிக்க வேண்டும் இவ்வா று அவர் பேசினார்.
இந்த கூட்டத்தி ல், வட்டார,
நகர காங்கிரஸ் தலை வர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து
கொண்டார்கள்.
முடிவில், தொகுதி தலைவர் நசீர் நன்றி கூறினார்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply