தனக்கு கைக்கு அடக்கமான ஒருவரை எம்எல்ஏ ஆக்கிட்டா, அரசியலும் சரி அதிகாரமும் சரி நம்ம பாக்கெட்லயே இருக்குமே என்று தலைவாசல் யூனியன் சேர்மனும், அதிமுக ஒன்றிய செயலாளருமான இராமசாமி ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் நினைப்பதுண்டு கடந்த முறை மருதமுத்துவை கெங்கவல்லி எம்எல்ஏவாக அடையாளம் காட்டி அடிமையாக வைத்துக் கொண்டவர், இந்த முறை தலைவாசல் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நல்லதம்பியை கூட்டிகிட்டு போய், சேலம் புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் புத்திரகவுண்டன் பாளையம் இளங்கோவன் மூலம் சீட்டை வாங்கிட்டார். அதிமுக தலைமை கொடுத்த பணத்தை வாக்காளர்களுக்கு வாரி இறைத்ததோடு, கெங்கவல்லி தொகுதியிலுள்ள திமுக நிர்வாகிகளுக்கும் அக்கறையாக கவனிக்க, நல்லதம்பி எம்எல்ஏ ஆகிவிட்டார். இவருடைய வெற்றியில் பாமகவின் உழைப்பும் கலந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது நல்லதம்பி. அதிமுகவினருக்கு முழு அறிமுகம் இல்லை தொகுதி மக்களுக்கும் அப்படியே! எம்எல்ஏ அலுவலகம் பக்கம் வந்தால், அன்று கூடவே மழையும் வர வாய்ப்பிருக்கு தொகுதியில எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது. நல்லதம்பியை கூப்பிடறதும் இல்ல இவரும் போறதில்ல நல்லதம்பி எம்எல்ஏ என்றாலும், ஆக்டிங் எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் இராமசாமிதான்! ஓட்டு போட்டவர்களும் உழைத்து ஜெயிக்க வைத்தவர்களும் தேவைக்கு இராமசாமியைத்தான் தேடி போகிறார்கள். அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சி என்றாலும், இராமசாமி ஆதிக்கம்தான் நல்லதம்பி அங்கேயும் ஜீரோதான். எளிமையான மனிதரான நல்லதம்பியின் போக்குவரத்து எம்எல்ஏ ஆனபின்பும் பஸ்லதான் வடக்குமரை கோயில் சாதி பிரச்சனையால், ஊரே இரண்டுபட்டு, மூன்றுமுறை அமைதி பேச்சிவார்த்தை கூட்டம் தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது ஒருமுறைகூட நல்லதம்பி எட்டி பார்க்கவில்லை. பிரச்சனை பெரியதாகி சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையிலும், இருக்கிற இடம் தெரியாம இருந்து கொண்டார் நல்லதம்பி தொகுதிக்குள் ஓட்டுகேட்டு போனதோடு சரி ஜெயிச்சபிறகு நன்றி சொல்லக்கூட போகல, அரசு கொடுக்கும் சம்பளத்தை தவிர வேறு எதையும் நினைத்துக்கூட பார்க்காத நல்லதம்பி ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்படி எம்எல்ஏ பதவியை மையப்படுத்தி வரும் அனைத்து வருவாயையும் இராமசாமிக்கே கொடுக்க ஒத்துக் கொண்டாராம். ஆளுங்கட்சி திமுக, நாங்க எதிர்கட்சி எங்களால என்ன செய்யமுடியும்? என்று நம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர் சீனியர் அதிமுகவினர் சிலர். தொகுதி மக்கள் அதிமுகவினர் தேவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும், நல்லதம்பிக்கே ஏதாவது தேவை என்றால் இராமசாமியிடம் மனு கொடுத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதான். இதுதான் நல்லதம்பியின் ஒரிஜினல் நிலவரம்! தேர்தல் வாக்குறுதிகள் மறந்து போயிருக்கும் இன்றைய நிலையே ஐந்து வருடங்களும் தொடர்ந்தால் பாவம் ஓட்டுபோட்ட மக்கள் நல்லதம்பி நிலவரம் இப்படி இருப்பதால், தலைவாசல் தேவேந்திரன் குடும்பத்தினர் ஆளுக்கொரு கட்சியில் இருக்கின்றனர் அதில் திமுகவில் இருப்பவர் தொகுதியில டாமினேஷன் பண்ணலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
கெங்கவல்லி தொகுதி நல்லதம்பி எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை
