ஒவ்வொரு வருடமும் மாநில அரசுகளின் ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை கருத்தில்கொண்டு PAI தர குறியீடு பொது விவகாரக் குறியீடு, அதாவது, Public Affairs Index வெளியிடப்படுகிறது. பெங்களூரை சேர்ந்த Public Affairs Centre என்ற தனியார் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. வளர்ச்சி, சமத்துவம், நிலையான தன்மை ஆகிய மூன்று விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.
ஐந்து வருடங்களாக வெளியிடப்படும் இந்த தர வரிசையில் முதல் வருடத்தில் இருந்து இப்போது வரை கேரளாதான் அதிக PAI புள்ளிகளை பெற்று முதலிடம் வகித்து வருகிறது.
இந்த முறையும் கேரளா மொத்தமாக 1.618 புள்ளிகளை பெற்று தரவரிசையில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு இந்த வருடமும் 0.897 புள்ளிகளோடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை இன்னொரு தென்னிந்திய மாநிலமான தெலுங்கானா 0.897 புள்ளிகளோடு பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் 5 தென்னிந்திய மாநிலங்கள் வந்துவிட்டன. சிறிய மாநிலங்களில் சிக்கிம் 0.907 புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது.
இதில் உத்தர பிரதேசம் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மோசமான ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இந்த புள்ளிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவமும் நிலையான தன்மையும் மிக குறைவாக உள்ளதால் உத்தர பிரதேசம் இதில் பின்னடைவை சந்தித்துள்ளது.
Leave a Reply