கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டும் பாஜக வென்றுள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு சொந்தமான விஜயபுரா மாவட்டத்தில் தான் தேர்தல் நடந்தது. பாஜக வசமிருந்த தொகுதி காங்கிரசால் கைப்பற்றப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு பாஜக மேலிடத்தால் வலியுறுத்தப்பட்டு வெளியேறியவர் எடியூரப்பா. இந்நிலையில் நடந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றால் பசவராஜ் பொம்மை தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக பொருள் என்றும், தோல்வியடைந்தால் பசவராஜ் பொம்மைக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் முன்னதாகவே பாஜகவினர் அர்த்தம் கற்பித்துகொண்டனர். இந்நிலையில், ஹனகல் தொகுதியில் பாஜக வெல்வதற்கு எளிதான சூழல் இருந்தும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 7591 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவியது. தொகுதி பாஜகவின் கோட்டை.யான இத்தொகுதியில் எடியூரப்பாவின் லிங்காயத்து சமுதாய மக்கள் 30% இருக்கின்றனர். இது அவருக்கு எப்போதுமே ஆதரவான தொகுதி. ஏற்கனவே எடியூரப்பா கட்சியை விட்டு பிரிந்து தனிக்கட்சி நடத்தியபோது நடைபெற்ற தேர்தலில் இங்கு பாஜக தோல்வியடைந்து.
பசவராஜ் பொம்மையை வீழ்த்துவதற்காக எடியூரப்பா கொடுத்த இந்த ஷாக், மேலிடத்தையும் வெறுப்பேற்றியுள்ளது. எனினும், ஆட்சி நிறைவடைய இன்னும் 18 மாதங்களே இருக்கின்ற சூழலில் நிலைமையை மேலும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தலைமை கருதுகிறது. பசவராஜ் பொம்மையை டெல்லிக்கு அழைத்து நிறையெ பேசி அனுப்பியிருக்கிறார்கள். எடியூரப்பா வேலை இத்துடன் முடியுமா, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Leave a Reply