நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி தள பொறுப்பாளர் பேபி பணிபுரிந்து வருகிறார்.இவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டத்தில் பணிதள பொறுப்பாளர் பணியில் இருந்து பணியிடம் நீக்கம் செய்வதாக மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.இந்த நிலையில் இன்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மன்ற கூட்டமானது நடைபெற இருந்த நிலையில் 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்…
இதுகுறித்து நாவல்பட்டி ஊராட்சி 5வது வார்டு திமுக உறுப்பினர் நவீன் கூறுகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிதள பொறுப்பாளர் பேபி மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற கூட்டத்தில் பணி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகும் தற்போது வரை அப்பெண் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பணியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-பி.கௌரிசங்கர்