விழுப்புரம் நகர டென்ஷன்
நாற்பத்தி இரண்டு வார்டுகளை கொண்ட விழுப்புரம் நகராட்சியை பிடிப்பது, மாவட்ட செயலாளரும் முன்னாள் மந்திரியுமான சி.வி.சண்முகத்திற்கு மானப்பிரச்சனை! விழுப்புரத்திலிருந்து பொன்முடியை தோற்கடித்து, திருக்கோயிலூருக்கு அனுப்பி வைத்தவரை, விழுப்புரத்தில் தோற்கடித்து மைலத்திற்கு கிளம்பச் சொல்லிட்டார் விழுப்புரம் திமுக சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன். விழுப்புரம் நகரத்தை இரண்டாக்கி வண்டிமேடுராமதாஸ், பசுபதி இருவரையும் நகர செயலாளராக அடையாளம் காட்டினார் சி.வி.சண்முகம் இன்னைக்கு இரண்டு பேருமே நகரமன்ற தலைவராக ஆசைப்படறாங்க, தலைவர் பதவி லேடீஸ் கோட்டாவா இருந்தால் தங்கள் துணைவியாரை நிற்க வைக்கும் முடிவில் இருக்கின்றனர். ஆனால் கவுன்சிலர் வேட்பாளராக அதிமுகவினர் யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. வழக்கம்போல சி.வி.சண்முகம் செலவுக்கு பணம் கொடுத்தால், தேர்தலை சந்திக்கலாம் என்கிற முடிவில் இருக்கின்றனர் விழுப்புரம் நகர அதிமுக நிர்வாகிகள். பசுபதியை விட வண்டிமேடு ராமதாஸை தலைவர் பதவிக்கு அடையாளம் காட்ட சி.வி.சண்முகம் நினைத்திருந்தாலும், பழைய உற்சாகத்தை தொலைத்துவிட்டு சோர்வடைந்து கிடக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதிமுக வெற்றிபெறும் வார்டுகளின் எண்ணிக்கை சிங்கள் டிஜிட்ல இருக்கலாம் என்கிறது களநிலவரம். திமுகவுல முன்னாள் நகரமன்ற தலைவர், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் கைகாட்டும் நபருக்குதான் தலைவர் பதவி வாய்ப்பாம், வார்டுகளில் போட்டியிட திமுகவினர் ஆர்வமாக இருக்கின்றனர் டாக்டர் லட்சுமணன் எம்எல்ஏ அதைவிட ஆர்வமாக இருக்கிறார் அதிமுகவினர் ஒருவரும் ஜெயித்துவிடக்கூடாது என்பதில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை விட டாக்டர் லட்சுமணனா? சி.வி.சண்முகமா? இவங்க இருவரையும்தான் வேட்பாளர்களா பாக்கறாங்க, விழுப்புரம் நகர கழகத்தினர் மத்தியில் இதுதான் ஹாட் டாபிக்! மீண்டும் லட்சுமணன் கை ஓங்கும் கள நிலவரம் அப்படித்தான் இருக்கிறது.
Leave a Reply