முப்பத்தி மூன்று வார்டுகளை கொண்ட திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றப் போவது யார்? என்று போட்டி வைக்க வேண்டிய அவசியமே இல்ல. காரணம் அதிமுக தரப்பில் நிலவரம் கலவரமா இருக்கு முன்னாள் நகர செயலாளர்கள் வெங்கடேசன், தேவநாதன், இவர்களுடன் பாக்கியராஜ்சேகர், பாமகவிலிருந்து வந்த மலர்சேகர், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் முகம்மது ஷெரீப் இவங்க ஐந்து பேரும் தலைவர் கனவில் இருந்தாலும், மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் கனவு என்னவென்று தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். திண்டிவனம் நகராட்சிக்கும் சி.வி.சண்முகம் வீட்டிறகும் கூப்பிடும் தொலைவுதான், இதில முகம்மது ஷெரீப் தவிர மற்றவர்கள் பொருளாதார பலமில்லாதவர்கள் ஆனால் அனைவருமே சி.வி.சண்முகம் செலவுக்கு பணம் கொடுத்தால் தைரியமாக நிற்கலாம் என்கிற முடிவில் இருக்கின்றனர். திமுகவுல திண்டிவனம் நகரமே வேண்டாம் என்று நகர செயலாளர் பதவியை உதறிவிட்டு மைலம் ஒன்றிய செயலாளராக மாறிப்போன சேதுநாதன் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திண்டிவனம் வந்திருக்கிறார். நகராட்சி தலைவர் பதவி எனக்குத்தான் வேண்டும் என்று அடம் பண்ண, திமுக நிர்வாகிகள் டென்ஷன் ஆயிட்டாங்க இவரு என்ன நினைச்சிகிட்டு இருக்காரு? பதவினா இவர்தான் வரனுமா? கட்சியில வேற ஆளே இல்லையா? என்று கொதிக்க ஆரம்பித்துவிட்டனர். சேதுநாதன எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கற நேரம் போக மற்ற நேரங்களில் மாவட்ட செயலாளரும் சிறுபான்மைத்துறை மந்திரியுமான கே.எஸ்.மஸ்தானுடன் பயணம் செய்கிறார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதவிக்கு வந்தவர்கள் பயன்படுத்திய ரூட்டை தெரிந்து கொண்டவர், பண மூட்டைகளுடன் தயாராகிவிட்டார் நகரத்தில் எல்லா வார்டுகளிலும் வாக்காளர்கள் மத்தியில் சேதுநாதன் நல்ல பரிட்சயம் உள்ளவர் எளிமையான மனிதர் எப்படியாவது சாதித்துவிட துடிக்கிறார் பொதுக்குழு உறுப்பினர் ரமணன், இவரும் மஸ்தானுடனே வலம் வருகிறார் தலைவர் பதவி ஆசை இவருக்கும் உண்டு. இவர்களோடு பைனான்சியர் ஆர்.ஆர்.எஸ்.ரவி, நகர செயலாளர் கபிலன் ஆகியோரும் ஆசைப்படற பட்டியல்ல இருக்காங்க. உற்சாகம் கரைபுரள சேதுநாதன் மீசையை தடவுவதை பார்த்தால், அவருடைய பணக்கணக்கும் மனக்கணக்கும் மந்திரி மஸ்தான் புண்ணியத்தில் சக்சஸ் ஆகலாம்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply