ஆட்சியில இல்லாதப்பவே நாங்கதான் ஜெயிச்சோம் இப்ப ஆட்சியில இருக்கோம் விட்ருவோமா? இப்பவே ஜெயிச்ச மாதிரிதான் என்று மகிழ்ச்சியில் கொக்கரிக்கின்றனர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பேரூராட்சி திமுக உடன்பிறப்புகள். பதினெட்டு வார்டுகளை கொண்ட போளூர் பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் தனசேகர் தன் மனைவி அமுதாவை நிறுத்த ஆசைப்படுகிறார் இவரின் மூத்த உடன்பிறப்பு சண்முகம் தன் மனைவி ராணியை தலைவராக்க ஆசைப்படுவதால், சண்முகம் பிரதர்ஸ் அனைவரும் மந்திரி எ.வ.வேலுவிடம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல கவுன்சிலரா நின்னு ஜெயிச்சிட்டு வாங்கனு சொல்லி அனுப்பிட்டார். தலைவர் பதவி நமக்குதான்னு நம்பிக்கையோட இருக்கின்றனர் சண்முகம் பிரதர்ஸ். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார் மனைவி நந்தினியை மாவட்ட கவுன்சிலர் ஆக்கிவிட்டார் அதனால, தாய் சாந்தியை பேரூராட்சி தலைவராக்க விரும்புகிறார். அடுத்தவர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.கே.பாபு தொழிலதிபர் எம்எல்ஏ சீட் எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை என்பதால், தேர்தல் வேலை செய்யாமல் கே.வி.சேகரன் தோல்விக்கு தானும் ஒரு காரணமாக இருந்ததால், மந்திரி எ.வ.வேலு இவர் மீது ஏக கடுப்புல இருக்கிறார். மொத்ததில சண்முகம் பிரதர்ஸ் குடும்பத்தில ஒருவருக்கு வாய்ப்பு இருக்கலாம். மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆதரவும், சண்முகம் பிரதர்ஸ் குடும்பத்திற்கு இருப்பதாக உள்ளூர் பிரமுகர்கள் கூடுதல் தகவல் சொல்கின்றனர். போளூரில் திமுக தோற்றுவிட்டதால், கட்சி நிர்வாகிகள் மீது கோபத்தில் இருந்த மந்திரி எ.வ.வேலு தேர்தல் செலவுக்கு பணம் தருவதாக சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
அதிமுக தரப்பில், போளூர் தொகுதி எம்எல்ஏவாகவும் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பெரிய சவுண்டு மன்னன் கட்சிக்காரர்களை விரட்டி மிரட்டி வேலை வாங்குவார் பணம் சம்பாதிக்க தெரியுமே தவிர செலவு பண்ண தெரியாது அதனால வாயால வடை சுடலாம்! பலன் ஒன்றும் இருக்காது தொகுதிக்கு அடிக்கடி வந்து போவார் அதிமுகவினர் மத்தியில, எப்படியும் திமுகதான் ஜெயிக்கப்போவுது என்கிற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டதால் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் உற்சாகம் மிஸ்ஸிங்! பொதுக்குழு உறுப்பினர் ராஜன் ஒன்றிய அரசியலில் இருந்தாலும், தன்னுடைய மூத்த மருமகளை தலைவர் பதவிக்கு களமிறக்க நினைக்கிறார். நகர செயலாளர் பாண்டுரங்கன் தன் மருமகளை தலைவராக்க திட்டம் வைத்திருக்கிறார். பகாரா பழனி தன் மருமகளை தலைவராக்கிவிட தீவிரமாக இருக்கிறார். அதிமுகவினரின் சம்பந்திகள் பெரும்பான்மையானவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தலைவர் பதவியை பிடிக்க நினைப்பவர்கள் ஒருசிலர் வெளிப்படையாக பேசினாலும், நான் கவுன்சிலருக்கு நிற்கிறேன் என்று தமாசுக்கு கூட சொல்ல மாட்டேங்கராங்க அதிமுகவினரின் ஒரிஜினல் கள நிலவரம் அப்படித்தான் இருக்கிறது. செலவுக்கு பணம் கொடுத்தால் நிற்கிறோம் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர் சிலர் மொத்ததில அதிமுகவினர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கவுன்சிலர்கள் ஜெயித்தாலே ஆச்சரியம்! ஆனால் திமுகவினர் ஜெயித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
– துலாம் ராசிக்காரன்
Leave a Reply