Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விழுப்புரத்தில் லட்சுமண அவதாரம்… அசத்திய அறிவாலயம்

விழுப்புரத்தில் லட்சுமண அவதாரம்…
அசத்திய அறிவாலயம்

ஒரு கால் நூற்றாண்டாக விழுப்புரம் திமுக வெளியே சொல்ல முடியாது மன அழுத்தத்திற்கு ஆளானது என்றால் அது பொய்யல்ல. ஆமாம் வன்னியர்கள், பட்டியல் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். அரசியல் ரீதியாக வன்னியர் தலைவர்கள் கோலோச்சிய மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தபோது கோவிந்தசாமி, திருக்குறள் முனுசாமி என பலர் அரசியல் ரீதியாக முழுமையாக வெற்றி அடைந்த தலைவராக இருந்துள்ளனர். அதற்கு பிறகு வந்த செஞ்சி ராமச்சந்திரன் புதிதாக தொடங்கப்பட்ட மதிமுகவுக்கு சென்றவுடன் அந்த இடத்தை நிரப்ப கோவிந்தசாமி மகன் ஏ.ஜி சம்பத் போன்ற வன்னியர் தலைவர்கள் முயற்சி செய்தாலும் பொன்முடி போன்ற உடையார் தலைவர்களால் அது தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்ததை தற்போது உள்ள திமுக தொண்டர்கள் முழுமையாக அறிவார்கள். ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் பதவிக்கு கூட வர வேண்டுமென்றால் பொன்முடியின் அருளாசி இருந்தால்தான் முடியும். 1989 ஆம் காலகட்டங்களில் இருந்து பொன்முடி தேர்தலில் பங்கேற்ற போதெல்லாம் உற்ற உறுதுணையாக இருந்தவர் மின்னல் ராஜா கலைஞரின் இதயத்திற்குள் இடம் பிடித்தவர். அதன் வெளிப்பாடு தான் மின்னல் ராஜா ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது நீதிபதி காரை அவரது ஆதரவாளர்கள் உடைத்தார்கள் என சட்டமன்றத்தில் ஜெயலலிதா கேள்வி எழுப்பும்போது மின்னல் ராஜா மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்றும் சட்டமன்றத்திலேயே கலைஞர் பதில் அளித்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட மின்னல் ராஜா வழக்கில் இருந்து விடுதலையாகி சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கேட்டு இருக்கும் நேரம் கொல்லப்பட்டார். அந்த கொலைக்கு பின்னால் பல்வேறு தலைவர்கள் தொடர்புடையது என்பது விழுப்புரத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்கு கூட தெரியும். கண்டமங்கலம் தொகுதியாக இருந்த போது புஷ்பராஜ்க்கு சீட்டு கொடுத்து புஷ்பராஜ் எம்எல்ஏ ஆனார் அடுத்த முறை தோல்வியை தழுவினார்.அதற்கு பிறகு புஷ்பராஜ் தேர்தலில் போட்டியிடாமலே இருக்க பார்த்துக் கொண்டவர் பொன்முடி. மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அடுத்தவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதில் புஷ்பராஜ் ஒரு உதாரணம். இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து விட்டதால் இனிமேல் உனக்கு சீட்டு இல்லை என்று காரணம் சொல்லி எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தனக்கு சீட்டை ஒதுக்கி கொண்ட பொன்முடியின் அரசியல் அம்பலப்பட்டது. இரண்டு முறை சேர்மேனாக இருந்து இன்னமும் இரண்டாம் கட்ட தலைவராகவே வலம் வந்து கொண்டிருக்கும் முன்னாள் சேர்மன் ஜனகராஜ். எப்படியாவது பொன்முடி எம்எல்ஏ ஆக்கி விடுவார் என்ற நம்பிக்கையில் அவருடனே வலம் வந்தவர். ஜனகராஜ் எம்எல்ஏ பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை என்று பொன்முடி தரப்பு மூலமாகவே ஒரு பிரச்சாரத்தை ஏற்படுத்தி அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்காமலே பார்த்துக் கொண்டவர் பொன்முடி.
அது மட்டும் அல்லாமல் உடையார் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் கல்பட்டு ராஜா தனது ஆஸ்தான பினாமியாக வைத்துக் கொண்டார்.பொன்முடி பல கோடி ரூபாய்க்கான பணிகள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் கல்பட்டு ராஜா மூலமாகவே செயல்படுத்தி லாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பது மற்ற கட்சிக்காரர்கள் மத்தியில் ஒரு சுணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.அது மட்டும் இல்லாமல்  பொன்முடியினுடைய சுயநலம் வெளிப்பட்டது.

ஒரு பக்கம் சொத்துக்கு வழக்கின் தீர்ப்பு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இன்னமும் அந்த வழக்கு தண்டனை நிலையிலேயே இருக்கிறது.இடைக்கால தடை தான் ஜாமீனாக வழங்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பக்கம் தலைக்கு மேல் கத்தியாக பொன்முடிக்கு இருந்து வருகிறது.

தலைமை பொன்முடியின் மீது உள்ள அதிருப்தியே இந்த மாவட்ட செயலாளர் சதுரங்க வேட்டை இத்தோடு பொன்முடி அரசியலில் விட்டு ஒதுங்க வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம்.அதையும் மீறி பொன்முடி எதிர்நீச்சல் போட துடிக்கிறார். ஒரு பக்கம் பழைய நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் பொன்முடியால் பலனடைந்த நிர்வாகிகளுக்கு சற்று மன வருத்தம் தான் அப்படி யாரும் பலனடையவில்லை என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். இதுவரை கால் நூற்றாண்டாக பொன்முடி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அடுத்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தயார் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டும் பொன்முடி மீது வைக்கின்றனர்.தன் சுய லாபத்திற்காக கட்சியை அடமானம் வைத்து பொன்முடி என்கிற ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தான் டாக்டர் லட்சுமணன் புது அவதாரம் எடுத்து மாவட்டத்திற்குள் நுழைந்தார் எனலாம். சுயமரியாதையோடு அனைவரையும் அரவணைத்து கட்சி நடத்த வேண்டும் அதுதான் கட்சிக்கும் வெற்றி நமக்கும் வெற்றி என்பதில் உறுதியாக இருக்கிறார் டாக்டர் லட்சுமணன். முதலில் கட்சியினர் செல்வாக்கு பெற்றார் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் செல்வாக்கையும் பெற்று வருகிறார். தன்னை நம்பி வருபவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் எங்கள் கேள்வி தொடர்ந்து அவருக்குள் எழுந்து வருவதை பார்க்க முடிகிறது. விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை தொடர்ந்து சுழண்டு கொண்டிருக்கிறார் டாக்டர் லட்சுமணன். ஏதோ பொந்துக்குள் மறைந்திருந்த  உயிரினம் போல கொஞ்சம் கொஞ்சமாக கட்சியினர் வெளியே வர தொடங்கி விட்டனர். டாக்டர் லட்சுமணன் கட்சிக்கு உழைத்தவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை அடையாளப்படுத்துவதற்கு தவறவில்லை. வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் தொண்டர்களுடனே பயணிக்கிறார் டாக்டர் லட்சுமணன். யார் சொல்வதையும் கேட்பதில்லை அரசியலில் மிக முக்கியமான ஒன்று அது. சரி என தனக்கு பட்டதை செய்து கொண்டிருக்கிறார் இது ஒரு பக்கம் பொன்முடி தரப்புக்கு அரசியலில் சறுக்களை ஏற்படுத்தியது எனலாம்.விக்கிரவாண்டி திருக்கோவிலூர் தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டமாக பிரித்து கௌதம சிகாமணிக்கு வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவரின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலத்தில் தான் நடந்து வருகிறது. லட்சுமணன் பெரிய மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய அதே நாளில் தளபதி அரங்கின் 200 பேர் அமரக்கூடிய சிறிய அரங்கில் கௌதம சிகாமணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால் அதிகாரம் தன் கையை விட்டு போக கூடாது என்பதில் பொன்முடி வைராக்கியமாக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. கலைஞர் அறிவாலையம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய ஆசை பொன்முடி வைராக்கியத்திலிருந்து இன்னமும் நீங்கவில்லை. 2026 தேர்தல் வேலையை தொடங்கிவிட்டார் டாக்டர் லட்சுமணன் இனி மாவட்டம் தன் கையை விட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வார் போல இருக்கிறது. தொண்டர்களும் உற்சாகமடைந்துவிட்டனர் லட்சுமணனின் வருகையில். இனி குடும்பத்திற்கு ஒரு சீட்டு தான் என தலைமை மறைமுகமாக அறிவித்த நிலையில் என்ன ஆகப் போகிறார் பொன்முடி…..

– பா.ஜோதி நரசிம்மன்