உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல்வேறு வியாதிகளில் கடுமையாக பாதிக்கப்படுவது பெண்களே என்றால் மிகையாகாது…!
உடல் ஏன் எவ்வாறு உஷ்ணப் படுகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
நவீன விஞ்ஞான தொலைதொடர்பு தொழில்நுட்ப கருவிகளில் ஒன்றான வாட்ஸ்அப், அதற்கு முன்னோடி கணினி எனும் கம்ப்யூட்டர் இவைகள் இரண்டுக்கும்… தாதாவான டிவி.. பெட்டி இவைகளிடமிருந்து இன்றைய மனிதர்களை பிரிப்பது என்பது சர்வ சாதாரணமான காரியம் அல்ல….
குறிப்பாக பெண்களை அதுவும் இன்றைய குழந்தைகளை இதிலிருந்து மீட்டெடுப்பது என்பது ஒரு பழுத்து முத்திப் போன குடிபோதைக்கு அடிமையான பயங்கரமான குடிகாரனை மீட்டெடுப்பதற்கு சமம்..!
இந்தத் தகவல் ஒலி… ஒளி… நுட்பக் கருவிகளை தொடர்ந்து பார்த்து வருவதால் கண்களின் வழியே கபாலத்திற்கு அதாவது தலையில் உள்ள மூளைக்கு உஷ்ணம் கந்துவட்டியைப் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது என்பது மருத்துவ உண்மை..
தலை உஷ்ணத்தின் தொடர்ச்சியாக பல்வேறு விபரீதமான சிக்கல்களின்.. நோயாளியாக நம்மை நாமே மாறிக் கொள்ள தயார் நிலையில் நமக்கு நாமே திட்டம் தீட்டிக் தயாராக உள்ளோம்.
பிறக்கும் குழந்தைக்கு பிறக்கும்போதே கண்ணாடி மாட்டி விட வேண்டிய விசித்திரமான நிலை உருவாகி வருகிறது.
இந்த உடல் உஷ்ண பிரச்சனையால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளின் கொடுமை சொல்லி மாளாது…
இந்த உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிகள் இருந்தாலும் நாளன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
அப்படி இருந்தும் தாகம் எடுத்த போதும் தண்ணீர் குடிக்காதவர்களே இன்றளவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் உடல் உஷ்ணத்திற்கு இன்றைய நவீன மசாலா கலப்பு உணவுகளும் ஒரு பெரும் காரணியாக அமைகிறது.
அதுபோக கோடைகால உஷ்ணம் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று..
பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும்.
இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களாகின்றன.
உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் உருவாகிவிடுகின்றன. எனவே, கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய நெருப்பின் அளவை உடலில் குறைக்க வேண்டும் அல்லது நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். நெருப்பின் அளவை நேரடியாகக் குறைத்தால் இதயத்தின் இயக்கங்கள் பாதிக்கப்படும். எனவே நீரின் அளவை சமன்செய்வதே சரியான தந்திர யோக வழியாகும்.
அதற்கான முத்திரையே வருண முத்திரை!
வருண முத்திரையை செய்யும் முறை:-
பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள்.
சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம்.
ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம்.
கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும்,
முத்திரைப் பயிற்சி செய்யும்பது கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான யோகா விதி முறையாகும்
கவனம் முழுவதும் மூச்சின் மீதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
குறைந்தபட்சம் 24 நிமிடங்கள்.
அதிகாலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம்.
உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம்.
ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். எனவே காலை மாலை என்று இருவேளை இரண்டாகப் பிரித்துக் கொண்டு இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வரலாம்..
1. உடற் சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4. வியர்க்குரு மறையும்.
5. சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
6. தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.
7. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
8. இளமையான தோற்றம் உருவாகும்.
9. தாகம் தணியும்.
10. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.
11. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல்வேறு உபாதைகள் குணமாகும்.
இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில் காத்துக்கொண்டிராமல்…. வருமுன் காப்போம் என்கின்ற கொள்கையின் அடிப்படையில் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் உஷ்ண சிக்கல்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்…
எனவே உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலேயே..
– மூத்த பத்திரிகையாளர் சங்கரமூர்த்தி
Leave a Reply