மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு தேர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு, கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் .முகமது ஜலில் தலைமை தாங்கினார் .
கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம். சீனி முகைதீன் ,எஸ். எம் .சீனி முகம்மது அலியார், எஸ் .எம். நிலோஃபர் பாத்திமா, எஸ் எம் .நாசியா பாத்திமா முன்னிலை வகுத்தனர். முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில், மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் இருந்து , சுமார் 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும்
கட் ஆப் மார்க் இல் இருந்து, 100 எழுதப்பட்ட ஊக்கத்
தொகை தேர்வு 100 மார்க் இணைந்து தரவரிசைப்படி இரண்டு லட்சம் முதல் 20 ஆயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டை, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறை தலைவி ரத்தினமாலா தகவல் தொடர்புத்
துறை தலைவி புனிதா ,கணிதப் பேராசிரியர் மக்கள் தொடர்பு துறை அதிகாரி முனைவர் லட்சுமண ராஜ், பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், எஸ்தர், வேலைவாய்ப்பு கழக அதிகாரி ரமேஷ் குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர் .நிகழ்வில், 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்லூரி துறை தலைவர்கள் அவர்களது துறை சார்ந்த முக்கியத்தை வீடியோ மூலம் விளக்கினர். மற்றும் துறை சார்ந்த வேலை வாய்ப்பினை பற்றி விளக்கினர். நேரடி சேர்க்கை நடைபெற்றது. நிகழ்வினை பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் தொகுத்து. வழங்கினார்.
-நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply