Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பழனி-கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பலைமடக்கி பிடித்த போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் நபரை கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்
கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும், தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர் நகர காவல்
நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து,
 நகர காவல் துணைக் கண்
காணிப்பாளர்  தனன்ஜெயன், உத்தரவின் பேரில்,
 நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், அறிவுரையின் படி
சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் ஆன போலீசார் இன்று சண்முகநதி பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது, சந்தேகப்
படும்படியாக வந்த 2 கார்களையும் நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் இருந்து கத்தி  பணம் போன்ற பொருள்களை கிடைத்ததை தொடர்ந்து ,
அதில் இருந்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபர்களிடம் இருந்து 2 கைபேசி , கார் மற்றும் நிசான் மற்றும் கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
– நா.ரவிச்சந்திரன்