வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், மதுரையில் மாட்டுத்தாவணி, தல்லாகுளம் , வண்டியூர், புதூர், சிம்மக்கல், ஆரப்பாளையம், விளாங்குடி, பரவை, கருப்பாயூரணி, சோழவந்தான்,
குருவித்துறை, திருமங்கலம், அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், திருப்பரங்
குன்றம். உள்ளிட்ட பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக காற்று மற்றும் இடியுடன் கன மழை பெய்தது.
கன மழை பெய்ததால், சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடிச்
சென்றது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது.
அந்த வகையில் மதுரை ஆரப்பாளையம் செல்லும் முக்கிய சாலையாக இருக்கும் ராஜா மேல் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி நின்று அப்பதை முழுவதும் போக்குவரத்திற்கு தடை செய்யப்
பட்டுள்ளது.
– நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply