Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அண்ணாமலை- அகிலாவை காதலித்தது எப்படி?

கர்நாடக காவல்துறையில் சிங்கமாக வளம் வந்த அண்ணாமலை குப்புசாமி தற்பொழுது தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாயும் புலி போல் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறார்
திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளை விட்டால் தமிழகத்தில் வேறு மிகப்பெரிய கட்சி எதுவுமில்லை என்ற சூழ்நிலையை சுக்குநூறாக உடைத்து பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தேடி தந்திருக்கிறார் அண்ணாமலை
பார்ப்பதற்கு சாது போல் காட்சியளிக்கும் அண்ணாமலைக்கு பின்புலமாக எந்தவித படையும் கிடையாது
ஆனாலும் தனி ஒருவனாக அரசியலுக்குள் நுழைந்து தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டு கட்சிகளை விரல் நுனியில் ஆட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது
எப்பேர்பட்ட அரசியல் தலைவர்களையும் காரசாரமாக பேசி வம்புக்கு இழுக்கும் அண்ணாமலைக்கு பின்னால் சுவராசியமான ஒரு காதல் கதையும் இருக்கிறது.
அண்ணாமலை மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் மிதுன ராசியில் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர் கரூர் மாவட்டத்தில் சின்ன தாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டி என்ற கிராமம்தான் அண்ணாமலையின் சொந்த ஊர். சுமார் 500 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தில் அண்ணாமலையின் வீடு ஒரு ஓட்டு வீடு தான்
அண்ணாமலையின் தந்தை குப்புசாமி கவுண்டர் அம்மா பரமேஸ்வரி.
அண்ணாமலையின் தந்தை குப்புசாமிக்கு சொந்தமாக விவசாயம் கூட கிடையாது ஏராளமான ஆடுகளை அவர் வளர்த்து வந்தார் அவ்வப்போது அந்த ஆடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அண்ணாமலை குடும்பத்தின் கதை ஓடியது
சிறுவயதிலேயே படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணாமலை கரூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படித்தார் பின்னர் நாமக்கல் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்தார்
இதனை அடுத்து தனது மதிப்பெண் திறமையால் கோயமுத்தூரில் உள்ள பிரபலமான பி எஸ் ஜி கல்லூரியில் பி இ படித்தார்
இதே பி எஸ் ஜி கல்லூரியில் தான் அகிலா சுவாமிநாதன் என்ற புத்திசாலி மாணவியும் படித்து வந்தார்.
அண்ணாமலை பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரி கருப்பு நிற தோற்றம் கொண்டவர் அவரைப் பார்த்த உடனே தெரியும் இவர் ஒரு பட்டிக்காட்டான் என்பது.
அதேசமயம் அகிலா சுவாமிநாதன் மிகவும் அழகானவர். யாரிடமும் எளிதாக பழகக் கூடியவர் கலகலப்புடன் கூடிய சுறுசுறுப்பானவர்
அண்ணாமலை மென்மையானவர் என்றால் அகிலா சுவாமிநாதன் பிடிவாதம் மிக்கவர்
பி எஸ் ஜி கல்லூரியில் அண்ணாமலை பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு படித்து வந்தார் அகிலா சுவாமிநாதன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்
பி எஸ் ஜி கல்லூரியில் இயங்கி வந்த ஒரு மாணவர் அமைப்பில் இவர்கள் இருவருமே உறுப்பினர்கள் என்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொண்டார்கள்
படிப்பு தொடர்பாகவும் மாணவர் அமைப்பு தொடர்பாகவும் இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்ட நிலையில் ஒருவருக்கொருவர் தோழன் தோழி ஆனார்கள்
காலங்கள் பல கடந்தன …கல்லூரி வாழ்க்கை முடிவடைந்தது.. அண்ணாமலையும் அகிலாவும் கல்லூரி வாழ்க்கைக்கு விடை கொடுத்தார்களே தவிர தங்களது நட்பை மேலும் தொடர்ந்தனர்.
அண்ணாமலை தனது மேல்படிப்புக்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி கழகத்தில் இணைந்து வணிக நிர்வாகத்துறையில் முதுநிலை பட்டம் படிக்க ஆரம்பித்தார்
அகிலா சுவாமிநாதன் கோவையில் இருந்து கிளம்பி பெங்களூர் சென்றார் அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி கழகத்தில் எம் பி ஏ படிக்க ஆரம்பித்தார்
அவ்வப்போது லக்னோவில் இருந்து பெங்களூருக்கு போன் கால்கள் வர ஆரம்பித்தன
என்ன மேடம் எப்படி இருக்கீங்க என் அண்ணாமலை கேட்க சொல்லுங்க சார் நல்லா இருக்கிறேன் என்று அகிலா சுவாமிநாதன் பேச இதுவரையிலும் அவர்களுக்கான நட்புதான் தொடர்ந்ததே தவிர இன்னும் அவர்கள் காதலிக்க ஆரம்பிக்கவில்லை
இருவரும் முதுகலை படிப்பில் இரண்டாம் ஆண்டில் கால் வைத்த போது ஒருநாள் இரவில் அந்த நட்பு காதலாக மாறியத
நான் உங்களை காதலிக்கிறேன் ஐ லவ் யூ என்றெல்லாம் அண்ணாமலை சொல்லக்கூடிய நபர் அல்ல.. நேரடியாகவே தொலைபேசியில் கேட்டார் ஏன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது
இந்தக் கேள்விக்கு சினிமா கதாநாயகிகள் போல் நான் யோசித்து சொல்கிறேன் என்றெல்லாம் அகிலா சுவாமிநாதன் சொல்லவில்லை ஏன் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாமே என்றார்
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது இதன் பின்னர் அவர்கள் தொலைபேசியில் எப்படி காதலித்தார்கள் என்கிற விவரம் நமக்கு தெரியாது
தொடர்ந்து இருவரும் காதலித்துக் கொண்டே நன்றாக படித்தும் வந்தார்கள்
அகிலா சாமிநாதன் எம் பி ஏ படிக்கும் பொழுதே ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பு படித்தார்
பின்னர் ஜே எஸ் டபிள்யூ எனும் இரும்பு கம்பெனி யில் உதவி மேலாளராக மும்பையில் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். அங்கேயே டெபுடி மார்க்கெட்டிங் மேனேஜர் பதவியையும் எட்டிப் பிடித்தார்
பின்னர் கோவைக்கு திரும்பிய அவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றினார்
இதனைத் தொடர்ந்து உலக அளவில் பிரபலமான ஹெச்பி என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தில் பிசினஸ் மேலாளராக பணியில் சேர்ந்தார்
ஆக மொத்தம் ஏழு ஆண்டுகள் உருண்டோடின
அடுத்த கட்ட காட்சியில் அண்ணாமலை தனது தந்தைக்கு போன் செய்து கொண்டிருந்தார் எனக்கு இந்த படிப்பு போதுமானதாக இல்லை நான் இந்திய ஆட்சி பணியிலா சேர விரும்புகிறேன் என்று தந்தையிடம் பேசினார்
மேலும் பல ஆட்டுக்குட்டிகள் விற்கப்பட்டன
அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வுக்காக படிக்க ஆரம்பிதார் படித்து முடித்தவுடன் 2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் உள்ள கற்கலாவில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பதவியில் சேர்ந்தார். பின்னர் சிக் மகளூர் உயர் காவல்துறை அதிகாரியானார்
மூன்று பகுதிகளாக வெளிவந்த சிங்கம் படத்தின் கதாநாயகன் சூர்யா போல் அவ்வப்போது மோட்டார் சைக்கிள்களில் சென்று போதை இளைஞர்களை வேட்டையாடி வந்தார்
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை பஞ்சாயத்து செய்து சமரசம் பேசினார்
கர்நாடக பொதுமக்கள் அண்ணாமலைக்கு நிஜமாகவே சிங்கம் என்ற பட்டத்தை கொடுத்து அழைத்தார்கள்
திரைப்படத்தின் இடைவேளை காட்சியை இப்பொழுது முடிவடைய அடுத்த கட்ட காட்சியில் அண்ணாமலைக்கும் அகிலா சுவாமிநாதனுக்கும் இடையே மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது
இருவருமே கொங்கு வேளாளர் கவுண்டர் என்ற ஜாதியை சேர்ந்தவர்கள் அகிலா சுவாமிநாதனும் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் எனவே இவர்களது திருமணத்திற்கு எந்த வித எதிர்ப்பும் எழ வில்லை
தொட்டம்பட்டி கிராமத்தில் காலடி எடுத்து வைத்த அகிலாசாமிநாதன் அண்ணாமலையின் கரங்களைப் பற்றிக் கொண்டு பெங்களூரு சென்றார்
வாடகை வீடு ஒன்றில் இருவரும் மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்தினார்கள் அண்ணாமலை அகிலா சுவாமிநாதன் தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்து வளர ஆரம்பித்தார்கள்
ஐபிஎஸ் வேலை அண்ணாமலைக்கு பிடிக்காமல் போகவே அதனை விட்டு வெளியே வந்தார்
இதற்கிடையே கோர் மேனேஜ்மென்ட் லீடர்ஷிப் அண்ட் டெவலப்மென்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தை அண்ணாமலையும் அகிலாவும் சேர்ந்து தொடங்கி அந்த நிறுவனத்தை பின்னர் முழுவதுமாக அகிலாவே பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்
ஒரு நல்ல நாளாக பார்த்து காவல்துறைக்கு குடாபை சொன்ன அண்ணாமலை வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் தீவிர சீடரான அண்ணாமலை அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பு கொண்டார்
2019 ஆம் ஆண்டு தனது காவல்துறை பணி ராஜினாமா செய்த அண்ணாமலை 2020 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆனார்
இடைப்பட்ட காலத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக அகிலா சுவாமிநாதனும் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்
இதன் பின்னர் எந்த சூழ்நிலையிலும் வெளியே தலை காட்டாத அகிலா சுவாமிநாதன் தற்பொழுது பழனி மலை முருகன் கோவிலுக்கு கணவருடன் வந்திருந்தார் என்பது தவிர அகிலாவை அரசியல் போர்வைக்குள் கொண்டு வந்து விடக் கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார்
இது தொடர்பாக கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒப்பந்தமே செய்து கொண்டு உள்ளார்கள் கணவர் செல்லும் இடத்திற்கு மனைவி வரக்கூடாது மனைவி செல்லும் இடத்திற்கு கணவர் வரக்கூடாது என்பது அவர்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்
இதுகுறித்து அண்ணாமலை சொல்லும் பொழுது அவரது டிபார்ட்மெண்ட் வேறு எனது டிபார்ட்மென்ட் வேறு தேவையில்லாமல் அவரை வெளிக் காட்ட வேண்டாம் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்
இதில் விசேஷம் என்னவென்றால் அண்ணாமலையை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் அகிலா சுவாமிநாதன்
அண்ணாமலை தனது காவல்துறை பணியை ராஜினாமா செய்த காலகட்டத்தில் அகிலா சுவாமிநாதன் தான் குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு அண்ணாமலைக்கு சோறு போட்டார் என்பதும் முக்கிய செய்தி ஆகும்
கால ஓட்டங்கள் கடந்த நிலையில்தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அரசியலை கற்றுக் கொண்ட அண்ணாமலை இப்பொழுது அந்தக் கட்சியின் சிகரத்தில் ஏறி நிற்கிறார்
அரசியல்வாதிகளுக்கே உரிய தில்லாலங்கடி வேலைகளையும் திரை மறைவில் செய்து வரும் அண்ணாமலை வருகிற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சருக்கி விழுவார் என்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்
வருகிற ஜூன் மாதம் நாலாம் தேதி மாலைஎன்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்