Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மோடியா? விஜயா? ராஸ்மிகா மந்தனா யார் பக்கம்?

அகில இந்திய அரசியலில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகப் போகிறது இதன்படி யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் அரசியலுக்கு இழுக்கும் வேலையை சர்வ கட்சிகளும் திட்டமிட்டு தங்களது பணியை தொடங்கி உள்ளன
இந்திய நடிகைகளில் இப்பொழுது பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை ராஸ்மிகா மந்தனா
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர் கன்னட படத்தில் நடித்து தெலுங்கில் வளர்ந்து தமிழகத்திற்கு தாவி இங்கு ம் தனக்கென தனி இடம் பிடித்தவர்
புஷ்பா படத்தில் ஐயா சாமி வாயயா சாமி மந்திர சாமி என்ற பாடலுக்கு ராஸ்மிகா போட்ட ஆட்டம் தான் அவரை உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்றது
இதன் பின்னர் நடிகர் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து தமிழர்கள் மத்தியிலும் தனி இடம் பிடித்தார் இந்தப் படத்திலும் ரஞ்சிதமே பாடல் மூலம் அவர் பட்டி தொட்டி எங்கும் இடம் பிடித்தார்
இதனைத் தொடர்ந்து தனுஷ் சிவகார்த்திகேயன் என அவருக்கு வரிசையாக தமிழில் படங்கள் கிடைத்துள்ளன
இந்த நிலையில் திடீரென அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து வெளியிட்ட வீடியோ அகில இந்திய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது
நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மும்பை நவி மும்பை இடையே கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலம் குறித்து அவர் பேசியிருந்தார்
அடல் சேது பாலம் என்பது மராட்டிய மாநில தலைநகர மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக் கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாலம் ஆகும் கடந்த 2018 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அடல் சேது பாலம் திறந்து வைக்கப்பட்டது
சுமார் 18000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இந்திய நாட்டின் மிக நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது
இந்தப் பானம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் ரா நடிகை ராஸ்மிகா மந்தனா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்தை கூறியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது மும்பை நவிமுப்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல் வழிபாலமாக அடல் சேது பாலம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த பாலத்தின் மூலம் இரண்டு மணி நேர பயணம் 20 நிமிட பயணமாக மாறி உள்ளது இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளால் தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியும் இது பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கிறது கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சியை பாருங்கள் இந்தியாவால் இது முடியாது என்று யாராலும் இனி சொல்ல முடியாது நாடு அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைகிறது என்று கூறியிருந்தார்
ராஸ்மிகா மந்தனாவின் எக்ஸ் பக்கத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி இதற்கு பதிலும் அளித்தார் அவர் கூறும் பொழுது
நிச்சயமாக மக்கள் இணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்ததை விட திருப்திகரமானது எதுவும் இல்லை என்று கூறியிருந்தால்
இதனை அடுத்து தனது சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியல் களத்தில் குதிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா அச்சாரம் போட்டுள்ளதாக தெரிகிறது
தற்பொழுது அவரது கைவசம் மொத்தம் ஐந்து படங்கள் உள்ளன இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது
இதனைத் தொடர்ந்து அவர் அரசியல் களத்தில் குதிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது அதற்கு முன்னோட்டமாக தான் பிரதமர் மோடியை அவர் புகழ்ந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் எனவே அவர் விரைவிலேயே பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம் என தெரிகிறது
இதற்கிடையே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சியில் பிரபல சினிமா நட்சத்திரங்களை இணைக்கும் பணி திரை மறைவில் நடைபெற்று வருகிறது
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சியில் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாது சில இயக்குனர்களும் இணைய காத்திருக்கிறார்கள்
அந்தப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவராக இருக்கிறார் அரசியல் களம் காணும் பொழுது மோடி கட்சியில் சேரலாமாஅல்லது விஜய் கட்சியில் சேர்வதா என்கிற குழப்பத்தில் ராஸ்மிகா பந்தனா சிலரிடம் ஆலோசனைகளை கேட்டு வருவதாக தெரிகிறது
எனவே விரைவிலேயே பாரதிய ஜனதா கட்சி அல்லது தமிழக வெற்றி கழகம் என ஏதாவது ஒரு கட்சியில்ராஷ்மிகா ம்ந்தனாஇணையலாம் என தெரிகிறது
சமீப காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் விஜய் போன்றோர் தங்களது திரைப்படங்கள் வெளிவரும் பொழுது அரசியல் தொடர்பாக எதாவது ஒரு பரபரப்பை கிளப்புவது தொடர்வதியாக இருக்கிறது இதன் மூலம் அவர்கள் நடித்த திரைப்படங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வசூலை அள்ளிக் கொடுக்கின்றன
எனவே ராஷ்மிகா மந்தனாவும் தனக்கென தனி பப்ளிசிட்டி தேடுவதற்காக இந்த அரசியல் டிராக்டை கையில் எடுப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்
எதுவாக இருந்தாலும் நடிகை ராஸ்மிகா மந்தனா அரசியலூக்குள் நுழைந்தால் அது பேசும் பொருளாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது முக்கிய செய்தியாகும்