மனைவியின் குழந்தை பாலினத்தை இணையதளத்தில் வெளியிட்ட யூ டியூபர் இர்பானுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது
சென்னையை சேர்ந்த இர்பான் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இர்பான் வியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினார் இதனோடு இணைந்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் ஆகியவற்றில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்
உணவகங்களில் உள்ள உணவுகளை சாப்பிட்டு பார்த்து அது குறித்த தகவல்களையும் வெளிநாட்டு பயணத்தின் மூலம் அங்குள்ள அனுபவங்களையும் பிரபலமானவர்களை நேர் காணல் செய்தும் தனது யூ டியூப் சேனலில் பதிவிட்டு வந்தார்
இவரது யூடியூப் சேனலுக்கு 40 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர் இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரையில் சம்பாத்தியம் செய்து வருகிறார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆலியா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார்
திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார்
இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை துபாய்க்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஸ்கேன் செய்து தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பது குறித்த தகவலை அறிந்து உள்ளார்
இதனை அடுத்து தனது மனைவியின் பாலினம் குறித்து இணையதளத்தில் தகவலை வெளியிட்டார்
இந்த தகவலை வெளியிட்டதோடு குழந்தையின் பாலினத்தை அறிந்த நிலையில் நண்பர்களுடன் அவர் ஆடிப் பாடும் வீடியோவும் வெளியாகிறது
இந்தியாவைப் பொறுத்த வரையில் கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் பால்லினத்தை வெளியே சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும்
இந்த நிலையில் தனது மனைவியின் குழந்தை பாலினம் குறித்து இருபான் வெளியிட்ட வீடியோவால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இணையதளத்திற்கு தகவல் தெரிவித்து இர்பாபான் வெளியிட்ட குழந்தை பாலின வீடியோவும் தடை செய்யப்பட்டது ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த வீடியோவை 20 லட்சம் பேர் பார்த்து ள்ளனர்
தற்பொழுது தமிழக சுகாதாரத்துறை சார்பில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து இது குறித்து விசாரணை நடதந்துவருகிறது
இந்த நிலையில் யூடூப்பர் இர்பான் இணையதளம் வாயிலாகவும் வாட்ஸ் அப் வாயிலாகவும் தான் செய்தது தவறு எனவே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார்
இருந்தபோதிலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது
தற்பொழுது இர்பான் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன
இர்பான் தனது மனைவியின் குழந்தை பாலினம் குறித்து வெளிநாட்டில் தான் பரிசோதனை செய்திருக்கிறார் இந்த தகவலை வெளிநாட்டு மருத்துவர்கள் தான் தெரிவித்துள்ளனர் மேலும் இர்வான் வெளியிட்டுள்ள தகவலுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார் இது மட்டுமல்லாமல் சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன எனவே அவரை தண்டிப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது
இன்னொரு பக்கம் இர்பான் செய்தது மிகப்பெரிய சட்ட குற்றம் இந்த குற்றத்திற்கு அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இர்பாபான் வழக்கை பொறுத்தவரையில் தமிழக சுகாதாரத்துறை குழுவினர் வெளியிடும் அறிக்கையை பொறுத்து தண்டனை அமையும்
எது எப்படி இருந்தாலும் சட்டப்படி அவர் குற்றவாளியாள நிலையில் 7 ஆண்டுகள் சிறை த் தண்டனை என்பது உறுதி என தெரிகிறது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply