செங்கல்பட்டு மாவட்டம், படுர் ஊராட்சியை சேர்ந்த, விஜய் மற்றும் அருணா தம்பதியரின் மகன் 5 வயது ரக்ஷன், அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் எல் கே ஜி படித்துவருகிறார்.
நேற்று இவரது இரண்டு கைகளை, பின்புறம் கட்டி கொண்டு,நீச்சல்குளத்தில் நீந்தி, புதிய உலக சாதனை படைத்தார்.
இரண்டு கைகளை பின்புறம் கட்டியவாரு,
நீச்சல்குளத்தில், 28 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 59 நொடிகளில், கடந்து புதிய சாதனை படைத்தார்.
இந்த சாதனையை, லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம், அங்கீகரித்தது.
இந்த உலகசாதனையை, லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர், ஜோசப் கலந்து கொண்டு, சிறுவனுக்கு பதக்கங்களை அணிவித்து, சான்றிதழினை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக, படுர் ஊராட்சிமன்றதலைவர் தாராசுதாகர், மற்றும் மாற்றத்தை நோக்கி நிறுவன தலைவர், ரி கி ஷி சுதாகர், மற்றும் குடியிருப்புபிரிவுதலைவர், கிருஷ்ணகுமார் உள்ளீட்டோர் பங்கு பெற்று நிகழ்வினை சிறபித்தனர்.
இந்த நிகழ்வினை, லிங்கன் புக் அப் ரெக்கார்ட்ஸ், நிர்வாகிகள் இலக்கியா, மற்றும் அரவிந்த் ஆகியோர், ஒருங்கிணைப்பு, செய்திருந்தனர்.