Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உயரதிகாரிகளிடம் புகார்காவலர்களால் தாக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள்- இது ராசிபுரத்தில்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  காவல்நிலையத்தில் திருடு போன இருசக்கர வாகனத்தை மீட்டு தர கோரி புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவர் மீது காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்  மற்றும் காவலர்கள், தாக்கியதில் சட்டக் கல்லூரி மாணவர் சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதி.

உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்ததால் ஆத்திரமடைந்த ராசிபுரம் காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து கடுமையாக தாக்கியதாக மாணவர் குற்றச்சாட்டு…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பூமணி. திருமணமான இவர் சேலம் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். ராசிபுரத்தில் இருந்து சேலம் சட்டக் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு புதிதாக ஒரு  யமஹா ஆர்15 பைக் வாங்கி பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் சட்டக் கல்லூரி மாணவர் பூமணியின் தம்பி சூர்யா     தனது அண்ணன் பூமணியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நண்பர்கள் தங்கியுள்ள அறைக்கு படிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்றுள்ளார்.
பின்பு சூர்யா படித்துவிட்டு நண்பரின் அறையியிலேயே தூங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த பொழுது சூர்யா ஒட்டி வந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சேலம் ராசிபுரம்  காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. பைக் திருடு போனது குறித்து  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சூர்யாவின் நண்பர்கள் தங்கும் அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. சிசிடிவி ஆதாரங்களை காவல் நிலையத்தில்  புகாராக அளித்தார்.

புகார் அளித்து இரண்டு மாதங்கள் ஆகியும்  ராசிபுரம் காவல் நிலைய காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கறிஞர் பூமணி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் சட்டக் கல்லூரி மாணவர் பூமணிக்கு உளவுத்துறை மூலம் திருடு போன இருசக்கர வாகனம் சேந்தமங்கலம்  பிரிவு ரோடு அருகே உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனை அறிந்த பூமணி சேந்தமங்கலம் பிரிவு ரோட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வாகன தணிக்கில் காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் ராசிபுரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது சட்டக் கல்லூரி மாணவர் பூமணியின்  திருடு போன தனது பைக் போன்ற ஒரு பைக் இருந்தது. பைக் அருகில் சென்று பார்த்து பூமணியை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அது என்னுடைய வாகனம் என கூறியுள்ளார்.

ஆனால் பூமணி வீடியோ எடுத்துள்ளார். இதில் கோபமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சட்டக் கல்லூரி மாணவன் பூமணியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் கடந்த 8 ஆம் தேதி புகார் அளித்த பூமணியை ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்வராசு உட்பட பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையில் பூமணி மற்றும் அவரது தம்பி சூர்யா ஆகியோரை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவர் பூமணி நம்மிடம்…,   பைக் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகிறது  காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்ததால் என்னை ராசிபுரம் போலீசார் திட்டமிட்டு தாக்கியதாக கூறினார்.

மேலும் திருடு போன எனது பைக் போன்றே ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் வாகனம் உள்ளதால், எனது வாகனமா என சோதனை செய்வதற்காக சென்றேன். இதனால் கோபமுற்ற ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சக காவலர்கள் என்னை தாக்கினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அங்கிருந்த காவல் ஆய்வாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டினார்.  

இதுகுறித்து விசாரித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் திருடு போன எனது இருசக்கர வாகனத்தை  மீட்டு  தர வேண்டும், தாக்குதலில் ஈடுபட்ட ராசிபுரம் காவல்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உயர்அதிகாரிகளிடம் புகார் செய்தால் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்றாலும் யோசிக்காம ரவுண்டு கட்டி அடிப்பாங்க போல இதுதான் ராசிபுரம் போலீஸார் ஸ்டைலோ? களவு போன வாகனத்தை கண்டுபிடித்து கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கண்டனத்துக்குரியவர்களே. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உரிய நடவடிக்கை எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.  
– சங்கர்ஜி